தூத்துக்குடி, ஏப்ரல் 24, 2025
திருச்செந்தூர் பகுதியில் சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றத்திற்காக குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நடுநாலு மூலை கிணறு பகுதியைச் சேர்ந்த குன்னி மலையான் மகன் அருள் செல்வம் (25) என்பவர் மீது 2019-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றச்சாட்டில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நீண்ட காலமாக விசாரணையில் இருந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் நேற்று (ஏப்ரல் 23, 2025) குற்றவாளி அருள் செல்வத்திற்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.15,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கை சிறப்பாக விசாரித்த அப்போதைய திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா, நீதிமன்றத்தில் திறம்பட வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவிய தலைமை காவலர் பரணி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருப்பது குற்றவாளிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக