வியாழன், 24 ஏப்ரல், 2025

தூத்துக்குடியில் ஆளுநர் மற்றும் துணை ஜனாதிபதிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்



தூத்துக்குடியில் ஆளுநர் மற்றும் துணை ஜனாதிபதிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

தூத்துக்குடி, ஏப்ரல் 25:
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி பல்கலைக்கழக தூணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராகவும், அந்த சட்ட மீறலை ஆதரித்த துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரைக்கெதிராகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று தூத்துக்குடியில் கருப்புக்கொடி ஏந்தி கண்டனப் போராட்டம் நடத்தியது.





இந்த போராட்டம் காலை 10 மணிக்கு சிதம்பரநகர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது. இதில் பலரும் கருப்பு கொடிகளுடன் கலந்து கொண்டு, ..“நீதி மேலானதா அல்லது ஆளுநரின் கட்டுப்பாடா?” என்ற கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்துக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் மற்றும் மாநகர மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் G.தனலட்சுமி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்டக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்வேறு கட்சித்தோழர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக