தூத்துக்குடி தூய சவேரியாா் ஆலய 136 வது திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது .
கொடியேற்றம்!!!!
தூத்துக்குடி சவேரியாா்புரம் புனித சவேரியாா் ஆலயத்தில் 24.11.2024 ஞாயிறு மாலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பேரருள் தந்தை ரவிபாலன் மற்றும் சவேரியாா்புரம் பங்குதந்தை அருட்தந்தை குழந்தைராஜன் தலைமையில் ஊா்நிர்வாகத்தினர் பொன்னாடை மற்றும் ஆளுயுர ரோஜாப்பு மாலை அனிவித்து வரவேற்றார்கள்.
மேளதாளத்துடனும் வாணவேடிக்கையுடன் அழைத்து சென்றனா்
இதனை தொடா்ந்து ... ஆலயத்திலிருந்து பவணியாக கொடிமரம் நோக்கி வந்தனா் பேரருள் தந்தை ரவிபாலன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து முதல்நாள் திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது மறையுரையாற்றினாா்
தருவைக்குளம் பங்கு தந்தை அருட்தந்தை வின்சென்ட் மறையுரையாற்றினாா்கள்.
7 ஆம் திருவிழா 30.11.2024 சனிக்கிழமை இரவு புனித சவேரியாரின் சப்பர பவணி நடைபெறும்
திருவிழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணைபவணி 9 ஆம் திருவிழாவான திங்கள்கிழமை மாலையில் நடைபெறும்
10 ஆம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை காலையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும் தொடா்ந்து சப்பர பவணி நடைபெறும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அருட்தந்தை குழந்தைராஜன் அடிகளாா் மற்றும் ஊா்நிர்வாகம் அருட்சகோதரிகள் பங்குஇறைமக்கள் அனைத்து சபைகளும் செய்திருந்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக