தூத்துக்குடியில் தெற்கு சோட்டையன்தோப்பு அருகே பாலம் கட்டப்படுவதை நிறுத்தக் கோரி 27.11.2024 புதன்கிழமை காலை 11 மணிக்கு சாலை மறியல் நடைபெற்றது.
இது பற்றிய செய்தியாவது:-
பாலத்திற்கு எதிர்ப்பு!!!
தூத்துக்குடியில் தெற்கு சோட்டையன்தோப்பு அருகே பாலம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் தீடீரென சாலை மறியல் செய்தனர்.
பாலம் கட்டப்படுவதை நிறுத்த வேண்டும் என கோஷம் எழுப்பி கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை மறியல்
தலைமை
ஆரோக்கியபுரம் நிர்வாகி ஆரோக்கியராஜ், வழக்கறிஞர்கள் பர்ணபாஸ் மற்றும் முனியசாமி, தெற்கு சோட்டையன்தோப்பு சப்பானி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில்....
ஆரோக்கியபுரம், ஆ.சன்முகபுரம், தெற்கு மற்றும் வடக்கு சோட்டையன்தோப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
போலீஸ் வருகை???
பேச்சு வார்த்தையில் மறியல் சமாதானம்!!!
கலைந்து சென்றனர் !
தாளமுத்துகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி தலைமையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையின் பின்னர் மறியல் வாபஸ் பெறப்பட்டது.
தீடீரென சாலை மறியல் ஏற்ப்பட்டதால் அப்பகுதியில் வாகனம் போக்குவரத்து தடைபெற்றது பின்னர் காவல்துறை யால் சீர்செய்ய ப்பட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக