சாலை மறியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாலை மறியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள், ஊரக வளர்ச்சி உள்ாாட்சி துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் – மறியல் ஆர்ப்பாட்டம் கைது நடவடிக்கை

photo news by Arunan journalistt 

தூத்துக்குடி: டிச 8

தொழிலாளர் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, இன்று (08.12.2025) தூத்துக்குடியில் CITU தலைமையில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை தொழிலாளர்களும், தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்களும் இணைந்து வேலைநிறுத்தத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks



போராட்டக்காரர்கள்,

  • 62 நாட்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு 11.10.2017 உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய ஊதியப் பாக்கிகள் இன்னும் வழங்கப்படாதது,
  • துவக்கப்பணியாளர்கள், ஓட்டுநர்கள், OHT ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கான DPC உயர்வுகள் நிறைவேற்றப்படாதது,
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள 74 தொழிலாளர்களின் நீண்டநாள் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு வழங்காதது,
  • 01.04.2003க்கு பிந்தைய புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,
  • மருந்தக பணியாளர்களுக்கான சம்பள உயர்வு மறுக்கப்படுவது,
  • பணிநிரந்தரம், அனுவாரியம் உள்ளிட்ட நலன்கள் வழங்கப்படாதது,
  • தினசரி தொழிலாளர்களுக்கு சம்பளம் தாமதமாக வழங்கப்படுவது

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும், மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தங்களது பாதுகாப்பு உபகரணங்கள், சம்பள உயர்வு, நிரந்தரப்படுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் தீவிரமாக பங்கேற்றனர்.

“உழைக்கும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மாநகராட்சி, அரசு வழங்க மறுக்கிறது; நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” என சங்கத்தினர் எச்சரித்தனர்.

காவல்துறை கைது நடவடிக்கை 

பெரும்பான்மையான பெண் தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார் கள் 

— தூத்துக்குடி லீக்ஸ்

thoothukudileaks

thoothukudileaks

செவ்வாய், 8 ஜூலை, 2025

மத்திய -மாநில அரசு அலுவலகம் காலிப்பணியிடங்கள் நிரப்பிய கோரி தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் சாலை மறியல்

Tamil Nadu updates photo news by Arunan journalist 

மத்திய -மாநில அரசு அலுவலகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பிட கோரியும் மத்திய மாநில அரசுகள் ஒப்பந்த தொழிலாளர்களை  நிரந்தர செய்திட கோரி  தூத்துக்குடியில் அகில இந்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் சாலை மறியல் நடைபெற்றது.





தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு இன்று 

 9-7-2025 காலை 10.30 மணியளவில் தொழிலாளர்களின் 44அம்ச கோரிக்கை குறித்து ஆளும்  அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது 


இன்று நடைபெற்ற தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் AITUC, CITU, INTUC, LPF, AICCTU, HMS ஆகியவை கலந்து கொண்டனர் 

அதிமுக பாஜக புறக்கணிப்பு !!

இன்று நடைபெற்ற சாலை மறியல்  போராட்டத்தில் அதிமுக பாஜக தொழிற்சங்கங்கள்புறக்கணிப்பு செய்தனர் 

திமுக பங்கேற்பு!!!

LPF உட்பட திமுக தொழிற் சங்கங்கள் கலந்து கொண்டனர்.



கைது நடவடிக்கை!!!

சாலை மறியலில் தூத்துக்குடியில் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்து 6மினி பஸ் களில் கொண்டு சென்றனர் 




புதன், 27 நவம்பர், 2024

தூத்துக்குடியில் தீடீர் சாலை மறியல் தெற்கு சோட்டையன்தோப்பு அருகே பாலம் கட்டபடுவதற்கு எதிர்ப்பு!!!

 தூத்துக்குடியில் தெற்கு சோட்டையன்தோப்பு அருகே பாலம் கட்டப்படுவதை நிறுத்தக் கோரி 27.11.2024 புதன்கிழமை காலை 11 மணிக்கு சாலை  மறியல் நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-


பாலத்திற்கு எதிர்ப்பு!!!

தூத்துக்குடியில் தெற்கு சோட்டையன்தோப்பு அருகே பாலம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் தீடீரென சாலை  மறியல் செய்தனர்.



 பாலம் கட்டப்படுவதை நிறுத்த வேண்டும் என கோஷம் எழுப்பி கோரிக்கை விடுத்துள்ளனர்.




 

சாலை மறியல்

தலைமை 

 ஆரோக்கியபுரம் நிர்வாகி ஆரோக்கியராஜ், வழக்கறிஞர்கள் பர்ணபாஸ் மற்றும் முனியசாமி, தெற்கு சோட்டையன்தோப்பு சப்பானி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில்....

ஆரோக்கியபுரம், ஆ.சன்முகபுரம், தெற்கு மற்றும் வடக்கு சோட்டையன்தோப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.


போலீஸ் வருகை???

பேச்சு வார்த்தையில் மறியல் சமாதானம்!!! 

கலைந்து சென்றனர் !

தாளமுத்துகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி தலைமையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையின் பின்னர் மறியல் வாபஸ் பெறப்பட்டது.


தீடீரென சாலை மறியல் ஏற்ப்பட்டதால் அப்பகுதியில் வாகனம் போக்குவரத்து தடைபெற்றது பின்னர் காவல்துறை யால் சீர்செய்ய ப்பட்டது.


புதன், 31 ஜூலை, 2024

தூத்துக்குடியில் சாலை மறியல்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

1-8-2024 photo news 

by Arunan journalist 

தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அண்ணா பேருந்து முன்பாக சாலை மறியல் செய்தனர் காவல்துறை கைது நடவடிக்கை.



இது பற்றிய செய்தியாவது:-

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு மற்றும்

ஏழை, நடுத்தர மக்கள் மீது தாக்குதல் ?

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மழை மற்றும்

நாசகார பட்ஜெட்டை கண்டித்து....

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்

2024 ஆகஸ்ட் 1இன்று

மாநிலம் தழுவிய

மரபெரும் மறியல் நடைபெறுகிறது..





தூத்துக்குடி அண்ணா ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முன்பு

நாள்: 01.08.2024 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு

CPI - மாநிலக்குழு உறுப்பினர் தோழர் S.P.ஞானசேகர் தலைமையில்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் ஈடுபட்டனர்.




தூத்துக்குடி காவல்துறை சாலை மறியல் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்து ராமலெட்சுமி மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோரிக்கை தூத்துக்குடியில் சாலை மறியல்

thoothukudileaks 16-2-2024

photo news by arunan journalist 

மத்திய மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல் தூத்துக்குடி மாவட்டம் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு இன்று 16-2-2024 காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில்

லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கு!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து!


தேசிய குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000/- என நிர்ணயம் செய்!

திருத்திய தொழிலாளர் சட்டங்களை (4 சட்ட தொகுப்புகளை) திரும்ப பெறு!


குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய

திருத்தங்களை திரும்ப பெறு!


மின்சார சட்டத் திருத்த மசோதா 2022ஐ திரும்ப பெறு!


முன்பணம் செலுத்தி மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தாதே!



100 நாள் வேலைத்திட்ட நாட்களை 200 நாட்களாக்கி நாளொன்றுக்கு ரூ.600/- கூலி வழங்கிடு!


விவசாயிகளுக்கு விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மானிய விலையில் வழங்கு!



விவசாய விளைபொருட்களின் உற்பத்தி செலவைப் போல் 50% அதிகமாக விலை நிர்ணயம் செய்து

அரசே கொள்முதல் செய்திடு!



பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்காதே!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்து!



கட்டுமானம் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களை ESI திட்டத்தில் இணைத்திடு!



மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை திரும்ப பெறு!


உணவு, மருந்து, இயந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான GST ஐ நீக்கு!


பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை நீக்கி, கலால் வரியைக் குறைத்து பெட்ரோலிய பொருட்களின்

விலையை குறைத்திடு!


வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்கு!



இவ்வாறு கோரிக்கை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது

சாலை மறியல் ஈடுபட்ட பெண்கள் உட்பட 200 பேர் காவல்துறை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொன்டு சென்றது.