வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோரிக்கை தூத்துக்குடியில் சாலை மறியல்

thoothukudileaks 16-2-2024

photo news by arunan journalist 

மத்திய மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல் தூத்துக்குடி மாவட்டம் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு இன்று 16-2-2024 காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில்

லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கு!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து!


தேசிய குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000/- என நிர்ணயம் செய்!

திருத்திய தொழிலாளர் சட்டங்களை (4 சட்ட தொகுப்புகளை) திரும்ப பெறு!


குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய

திருத்தங்களை திரும்ப பெறு!


மின்சார சட்டத் திருத்த மசோதா 2022ஐ திரும்ப பெறு!


முன்பணம் செலுத்தி மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தாதே!



100 நாள் வேலைத்திட்ட நாட்களை 200 நாட்களாக்கி நாளொன்றுக்கு ரூ.600/- கூலி வழங்கிடு!


விவசாயிகளுக்கு விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மானிய விலையில் வழங்கு!



விவசாய விளைபொருட்களின் உற்பத்தி செலவைப் போல் 50% அதிகமாக விலை நிர்ணயம் செய்து

அரசே கொள்முதல் செய்திடு!



பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்காதே!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்து!



கட்டுமானம் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களை ESI திட்டத்தில் இணைத்திடு!



மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை திரும்ப பெறு!


உணவு, மருந்து, இயந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான GST ஐ நீக்கு!


பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை நீக்கி, கலால் வரியைக் குறைத்து பெட்ரோலிய பொருட்களின்

விலையை குறைத்திடு!


வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்கு!



இவ்வாறு கோரிக்கை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது

சாலை மறியல் ஈடுபட்ட பெண்கள் உட்பட 200 பேர் காவல்துறை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொன்டு சென்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக