தூத்துக்குடி காமராஜர் கல்லூரி எதிர் புறம் உள்ள சக்திவிநாயகர் கோயில் முன்பு கிறிஸ்தவ பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர் இதை அகற்ற தீடீரென இந்து மக்கள் கட்சி அகற்ற முற்றுகை செய்தனர் இதனால் பரபரப்பு போலீஸ் வந்தனர் .
இதுபற்றி செய்தியாவது:-
சக்திவிநாயகர் கோயில் முன்பு கிறிஸ்தவ பேனர் கட்டியிருந்தனர்.
இன்று 18-9-2023 காலை தீடீரென பிளக்ஸ் பேனர் அகற்றக்கோரி இந்து மக்கள் கட்சியினர் சம்பவ இடத்தில் முற்றுகை இதை யடுத்து போலீசார் வழக்கு பதிவு
தற்போது..
காமராஜ் கல்லூரி எதிர்ப்புறம் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்து கொண்டிருந்தபோது ..
அதற்கு இடையூறாக கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான சோஸ்திர திருவிழா என்ற பெயரில் பிளக்ஸ் போர்டு கட்டியதாக கூறப்படும் நிலையில் அதை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சி மாநிலசெயலாளர் வசந்தகுமார் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனர்.
அப்போது காவல்துறையினர் சமாதானம் பேசி மேற்படி போர்டுகளை கட்டியவர்களை வைத்து கிறிஸ்தவ போர்டுகளை போலீசார் அகற்றினார்
தூத்துக்குடி மாநகராட்சியில் எவ்வித அனுமதியும் வாங்காமல் பிளக்ஸ் போர்டு வைத்திட காரணமாக இருந்த கிறிஸ்தவ
மதபோதகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
மேற்படி காமராஜர் கல்லூரி எதிர்ப்புறம் திருச்செந்தூர் மெயின் சாலையில் இந்து மக்கள் கட்சியினர் பெருந்திரளாக கூடியதை முன்னிட்டு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வீர குமார் மாவட்ட அவை தலைவர் சுடலைமணி மாவட்ட இளைஞரணி தலைவர் அழகுராஜா உட்பட ஏராளமான இந்து மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக