திங்கள், 13 அக்டோபர், 2025

திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இரு கண்கள்” — தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் விழா போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்களுக்கு போனஸை வழங்கிய பின்னர், தூத்துக்குடி மேயர் ஜெகன்  பேசினார்.



அவர் கூறியதாவது:
“திமுகவில் கலைஞரின் உறுதியான பக்தனாக இருந்த என் தந்தையார், 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தொழிலாளர்களின் நலனுக்கும், திமுக வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு செய்தார்.


 ஒவ்வொரு ஆண்டும் உப்பள அதிபர்களுடன் இணக்கமாக பேசி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை பெற்றுத் தந்தார்.

அவரது மறைவிற்கு பின் தொழிற்சங்க பிரதிநிதிகள் வேண்டுகோளின் பேரில், அந்தப் பொறுப்பை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். மாநகரின் அடையாள தொழிலான உப்பளத் துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தாங்களே சேமித்த பணத்தை சங்கத்தின் பெயரில் போனஸாக வழங்கி வருவது பெருமை அளிக்கிறது.

என் பார்வையில் திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இரு கண்கள் போன்றவர்கள். உங்கள் அடுத்த தலைமுறைவும் திமுகவிற்கும் தளபதியாருக்கும் துணையாக இருப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் பொருளாளர் ஆறுமுகநயினார், மாவட்ட திமுக பொருளாளர் ரவீந்திரன், பொது குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், ராஜாமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், பகுதி சபா உறுப்பினர் ஐசக், சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Photo news by sunmugasuthram press club president 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக