திங்கள், 13 அக்டோபர், 2025

தூத்துக்குடியில் இரவு வேளையில் அதிரடி – பல லட்சம் ரூபாய் பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்👇


தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.



மாநகராட்சி மேயர் ஜெகன் மற்றும் ஆணையர் பிரியங்கா தலைமையில், தடை செய்யப்பட்ட கேரிப்பை, டீ கப், தண்ணீர் கப், பிளேட் போன்ற பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக, நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையில், புதியதாக நியமிக்கப்பட்ட இளைஞர்–இளம்பெண்கள் படை 10 பேர் கொண்ட குழு இரவு வேளையில் களத்தில் இறங்கி திடீர் சோதனை மேற்கொண்டது.



தூத்துக்குடி கிப்சன் புறத்தில் உள்ள மொத்த கடையில் சோதனை நடத்தியபோது, கடையின் மாடியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



 உடனடியாக அவை மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி பறிமுதல் செய்யப்பட்டன.



பின்னர் அருகிலுள்ள குடோனிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு பெட்டி பெட்டியாகவும் பண்டல் பண்டலாகவும் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தது. இதனை கண்ட இளம்பெண்கள் படையினர் அதிர்ச்சி அடைந்தனர்.


உயர் அதிகாரிகளின் அனுமதியுடன், 10 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு கடை மூடப்பட்டு சாவி மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.



சமீபத்தில் 500 கிலோ கேரிப்பை பறிமுதல் செய்த அதே குழு, இம்முறை மீண்டும் இரவு நேரத்தில் களத்தில் இறங்கி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட இடம் 

நம்பிக்கை!!!

தூத்துக்குடி மாநகராட்சி இளைஞர்–இளம்பெண்கள் படையின் இந்த அதிரடி நடவடிக்கையால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் நகரத்தில் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக