தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி மாவட்டம் : 11.10.2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் வாராந்திர ஓய்வு முறையை தொழில்நுட்ப ரீதியாக எளிதாக்கும் நோக்கில், “WEEK-OFF CODE” எனும் புதிய QR Code முறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப இன்று அறிமுகம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கான வாராந்திர ஓய்வு நடைமுறை ஏற்கனவே அமலில் இருந்து வரும் நிலையில், அதை மேலும் துல்லியமாகவும் எளிதாகவும் மேற்கொள்ளும் வகையில், இம்முறை உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, இந்த WEEK-OFF CODE அனைத்து காவல் நிலையங்களின் அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன. காவல்துறையினர் தங்கள் செல்போனில் இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்து, வழிமுறைகளை பின்பற்றி தங்கள் ஓய்வு நாளை பதிவுசெய்யலாம்.
பதிவு செய்யப்பட்ட தகவல் நேரடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளின் ஒப்புதலுடன் உறுதிப்படுத்தப்பட்டு ஓய்வு வழங்கப்படும்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இந்த புதிய தொழில்நுட்ப முன்னெடுப்பு, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக