Tamil Nadu updates 27-5-2026
photo news by Arunan journalist
காரசாரமான தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்: – 48 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
தூத்துக்குடி:மே27
தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டம் பல்வேறு அரசியல் நகர்வுகளுடனும், பரபரப்புகளுடனும் அரங்கேறியது.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.அதிமுக -காங்கிரஸ் கட்சி சேர்ந்த சிலர் கவுன்சிலர்கள் கூட்டரங்கு வரவில்லை..
48 தீர்மானங்கள் நிறைவேற்றம்:
கவுன்சிலர்களின் காரசாரமான விவாதங்களுக்கு இடையே, மாநகராட்சியின் பல்வேறு வார்டு மேம்பாட்டு பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 48 முக்கிய தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் 'காணவில்லை' முதல்வர் ஜோசப் விஜய் படம்: கிளம்பும் புதிய சர்ச்சை!
இன்றைய மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்களை விட, அரங்கிலிருந்த ஒரு விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
என்ன நடந்தது?
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் தற்போதைய முதல்வர் விஜய்யின் புகைப்படம் இடம் பெறவில்லை. கடந்த மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களின் போது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதற்கு முன்னதாக முதல்வராக இருந்த மு.கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்கள் மாமன்ற கூட்ட அரங்கில் தொங்கவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, தற்போதைய முதல்வரின் புகைப்படம் மாமன்ற அரங்கில் வைக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
— .



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக