செவ்வாய், 26 மே, 2026

தூத்துக்குடி நிஷா பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் ஷாநவாஸுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

புதுச்சேரி:மே 26

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான சர்வதேச அளவிலான விருது வழங்கும் விழா புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. 

இவ்விழாவில், தூத்துக்குடியைச் சேர்ந்த நிஷா பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் ஷாநவாஸ் -க்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.



thoothukudileaks


ஏசியா இன்டர்நேஷனல் கல்சுரல் அகாடமி (Asia International Cultural Academy) மற்றும் அமெரிக்கன் விஸ்டம் பீஸ் யுனிவர்சிட்டி (American Wisdom Peace University) ஆகியவை இணைந்து நடத்திய இந்த பிரம்மாண்ட விழா, கடந்த 23.05.2026 சனிக்கிழமை காலை 10:15 மணியளவில் புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

​சமூக சேவை, கலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 23 சாதனையாளர்களுக்கு இந்த விழாவில் கௌரவ முனைவர் (டாக்டர்) பட்டமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

​சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு:

​இவ்விழாவில் முக்கியப் பிரமுகர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். :

  • டாக்டர் கராத்தே S. P. ஸ்ரீநாத்
  • ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் பி. ஹரிதாஸ்
  • ஆனைப்பேட்டை Dr. S. குணசேகரன்
  • Dr. M. ராஜகோபாலன்
  • தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநிலத் தலைவர் டாக்டர் M. சிவதமிழவன்
  • உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லிங்கம் M.A., B.L.
  • ராஜம்கம்பீர மஞ்சு குல சுவாமி
  • சில்வர் ஸ்கிரீன் உலக சாதனையாளர் டாக்டர் அருள் இன்னாசிமுத்து

​உள்ளிட்ட பல முக்கிய ஆளுமைகள் மேடையை அலங்கரித்தனர்.

​தூத்துக்குடிக்கு பெருமை சேர்த்த டாக்டர் ஷானவாஸ்:

​இந்த அரிய விழாவில், தூத்துக்குடி நிஷா பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர்  ஷா. ஷாநவாஸ் அவர்களின் இணையற்ற சமூக சேவையைப் பாராட்டி, அவருக்கு கௌரவ டாக்டர் பட்டமும், பட்டயமும், நற்சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது தூத்துக்குடி மாநகரத்திற்கு கிடைத்த பெரும் பெருமையாகும்.

​விருது வழங்கும் மேடையில் டாக்டர் ஷா. ஷாநவாஸ் அவர்களை வரவேற்று, அமைப்பின் இணை அமைப்பாளர் Dr. S. குணசேகரன்  பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.

​நெகிழ வைத்த உரை:

​விருதைப் பெற்றுக்கொண்ட பின், மேடையில் டாக்டர் ஷாநவாஸ்  'நிஷா பவுண்டேஷன்' அமைப்பின் நோக்கம் மற்றும் அதன் சமூகப் பணிகள் குறித்து 5 நிமிடங்கள் உரையாற்றினார். அவரது எளிய, உருக்கமான பேச்சு அரங்கில் இருந்த அனைவரின் மனங்களையும் கவர்ந்தது. 

விழாவிற்கு வந்திருந்த சான்றோர்கள் அனைவரும் எழுந்து நின்று, கைதட்டி தங்களது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

​சமூகத்தில் நலிவடைந்தோருக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் டாக்டர் ஷா. ஷாநவாஸ் அவரின் இந்த அறப்பணி மேலும் தொய்வின்றித் தொடர, 'தூத்துக்குடி லீக்ஸ்' நாளிதழ் சார்பில் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக