Tamil Nadu updates news by Arunan
தூத்துக்குடி, ஜூன் 5:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே உணர்த்தும் வகையில் இன்று தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பிங்க் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமையை வளர்க்கவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்பதையும் வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, அந்தோணி மார்சலின், ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.
மேலும் தன்னார்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பசுமையான மற்றும் தூய்மையான நகரை உருவாக்கும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக