தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி photo Arunan journalist
news by sunmugasuthram press club president
தூத்துக்குடி, பிப்ரவரி 23:
தூத்துக்குடியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடியாக பேசினார். வடக்கு மாவட்ட செயலாளரும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் அதிமுக மேயர்களான சசிகலா புஷ்பா மற்றும் அந்தோனி கிரேஸ் ஆகியோர் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்து அவர் ஆவேசமாக கொளுந்துவிட்டு எரிந்தார்.
ரீல் புகழ் சசிகலா புஷ்பா மீது மேயர் பாய்ச்சல்!
சமூக வலைதளங்களில் ரீல் சுற்றுவதில் புகழ்பெற்ற முன்னாள் மேயரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா மீது மேயர் ஜெகன் பெரியசாமி கடும் விமர்சனங்களை கொட்டினார்.
"2014 வரை மேயராக இருந்த சசிகலா புஷ்பா இந்த ஊருக்கு என்ன செய்தார்? ஒரு மணி நேரத்தில் தண்ணீர் கொண்டுவந்தேன் என்கிறார். 284 கோடி ரூபாய் குடிநீர் சப்ளைக்காக ஒதுக்கப்பட்ட நிதி இன்று வரை பயனற்றுக் கிடக்கிறது. அந்த பணியை நாம்தான் நிறைவேற்றி வருகிறோம்.
அவரது ஆட்சியில் மழைக்காலத்தில் இரண்டு மாதங்கள் பள்ளிக்கூடங்களே திறக்காமல் மூடிக்கிடந்தது. தற்போது அந்த நிலையே இல்லை" என்று மேயர் கூறினார்.
தற்போது பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவராக இருக்கும் சசிகலா புஷ்பா, தாம் இருக்கும் கட்சிக்கும் உதவி செய்யவில்லை என்று நையாண்டி செய்த மேயர், "278 கோடி செலவில் 32 குடிநீர் தொட்டிகள் அமைத்து 10 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவது நாம்தான்.
மாநகராட்சி அலுவலகத்திற்கு மாதம் ஒரு நாள் மட்டும் வந்த சசிகலா புஷ்பா இப்போது என்ன பேசுகிறார்?" என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
கட்டப்பஞ்சாயத்து அந்தோனி கிரேஸ் மீது கடுங்கோபம்!
முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸ் மீதும் மேயர் வெடித்தார். "அந்தோனி கிரேஸ் மேயராக இருந்தபோது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்காகவே மேயர் அறைக்குள் தனி அறை அமைத்தார்கள்.
பணி நியமனம் தருவதாக கூறி 10 பேரிடம் ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் வாங்கி பணி ஆணையே வழங்கவில்லை. பாவம், அந்த ஏழை மக்கள் செருப்பு தேய அலைந்தது தான் மிச்சம். பின்னர் ஆணையர் ராஜமணிதான் அவர்களுக்கு நீதி வழங்கினார்" என்று வெளிப்படையாக கூறினார்.
மேலும் "ஒரு ஏக்கர் அரசு இடத்தை கைப்பற்ற இறுதி முயற்சி செய்து வருகிறார். 'மூன்று மாதத்தில் அந்த இடத்தை மீட்போம்' என்று பேசுகிறார். நான் உறுதியாக சொல்கிறேன் — ஒரு படி மண்ணு கூட உன்னால் எடுக்க முடியாது!" என்றார் மேயர்.
பிஜேபி வக்கீலுக்கும் எச்சரிக்கை!
பிஜேபியில் அரசு வக்கீலாக இருக்கும் சண்முகசுந்தரம் தேவையில்லாமல் தெப்பக்குளம் பற்றி பேசுவதாக குறிப்பிட்ட மேயர், "140 வருட வரலாற்றை தெரியாமல் பேசுகிறார்.
அவரது ஆதரவாளர் ஒருவரே அந்த இடத்தை ஆட்டை போட்டு வைத்துள்ளார். இதுவரை மாநகராட்சி பகுதியில் 50 கோடி மதிப்புள்ள அரசு இடங்களை நாம் மீட்டுள்ளோம். இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்" என எச்சரித்தார்.
வெற்றி இலக்கு 200 தொகுதி!
பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை ஊக்கப்படுத்திய மேயர், "ஒவ்வொருவரும் 50 வாக்குகள் திமுகவிற்கு கொண்டு வர வேண்டும். 200 தொகுதி நமது இலக்கு. 280 பாகம் இருந்த இடத்தில் 360 பாகமாக மாறிவிட்டது. எந்த சலசலப்புக்கும் நான் அஞ்ச மாட்டேன். அதிரடி அரசியல் ஆரம்பித்தால் உங்களால் தாங்க முடியாது — குற்றம் சொல்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்!" என்று எதிர்க்கட்சியினரை நேரடியாக சவால் விட்டார்.
— தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு செய்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக