அன்னதானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னதானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 செப்டம்பர், 2026

தூத்துக்குடியில் தவெக சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு அன்னதானம், நீர்மோர் வழங்கல்

 Tamil Nadu updates 20-9-2026

தூத்துக்குடியில் தவெக சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னதானம், நீர்மோர் வழங்கல்

தூத்துக்குடி, செப்.20:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்டம் கீழ மேற்கு பகுதி சார்பில் மாபெரும் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.




தூத்துக்குடி விவிடி மெயின் ரோட்டில் அண்ணாநகர் பத்திரகாளியம்மன் கோவில் எதிர்புறம் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமிழக வெற்றிக் கழக மாநில துணை செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் தலைமை வகித்து அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

thoothukudileaks


கீழ மேற்கு பகுதி செயலாளர் ஆர். முத்துபாலன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழ மேற்கு பகுதி நிர்வாகி பி.கே. கொம்பையா செய்திருந்தார்.


நிகழ்ச்சியில் மகளிர் அணி ஜஸ்வர்யா இணைச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ராசாசிங், துணைச் செயலாளர் மீட்டன் தினகரன், செயற்குழு உறுப்பினர் செந்தில், வட்டக் கழக செயலாளர் பொன் சிவா, செல்வமணி, ரகு, கோபி, பெத்து ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



விறுவிறுப்பான நிகழ்வு வீடியோ... பார்க்க 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று சென்றனர்.





வெள்ளி, 18 செப்டம்பர், 2026

மதுரையில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் அன்னதான விழா

Tamil Nadu updates 18-9-2026

மதுரையில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் அன்னதான விழா

மதுரை: செப் 18

மதுரையில் நடைபெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவில், அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.


மகா கும்பாபிஷேக விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், விழாவிற்கு வருகை தந்த பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சங்கத்தின் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அன்னதானம் பெற்று சென்றனர்.

thoothukudileaks


அன்னதான விழாவை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட வாசி யோக சித்தர் ராம் நாராயணன் குரு, ஸ்ரீ வித்யாம்பா சரஸ்வதி மற்றும் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவர் பிரபு ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


அன்னதானம் பெற்ற பக்தர்கள், சங்கத்தினருக்கு தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். 


பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அன்னம் வழங்கியதுடன், இதுபோன்ற சேவைப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


சங்கத்தின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் அருள்வேலன் ஜி  ஆலோசனைப்படி நடைபெற்றது.


 இந்த மாபெரும் அன்னதான விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட மாநிலப் பொறுப்பாளர்கள் சித்த மருத்துவர் முருகேசன், தொழிலதிபர் சிவா, முருகன், கணேஷ், சித்த மருத்துவர் பாண்டிதுரை, ஜூசி பாண்டியன், கோவை செந்தில்குமார், சேலம் ரமேஷ் உள்ளிட்டோர் மற்றும் சங்க உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

thoothukudileaks


விழா ஏற்பாடுகளில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

தூத்துக்குடி போல்பேட்டை அருள்மிகு ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா அன்னதானம் துவங்கி வைத்து முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி போல்பேட்டை அருள்மிகு ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

தூத்துக்குடி: செப் 14,

தூத்துக்குடி போல்பேட்டை, புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருள்மிகு ஸ்ரீ போத்தி விநாயகர் திருக்கோவிலில் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.


விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு சுவாமிக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனை பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை தரிசித்து அருள் பெற்றனர்.

சிறப்பு அன்னதானம் 

மற்றும் கலை நிகழ்ச்சி

மதிய உணவாக பகல் 12.00 மணிக்கு பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

"கடந்த 42 வருடங்களுக்கு முன் திமுகவின் முரட்டு பக்தனாக திகழ்ந்த பெரியசாமி அவரது போல் பேட்டை பகுதியில் விநாயகர் கோயில் அவரது சொந்த செலவில் உருவாக்கி  கோவில் சிறப்பாக நடத்தி வந்தார். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக அப் பகுதியில் நடத்தி வருவார்.

 N.பெரியசாமி (Ex.M.L.A) அவரின் நினைவாக, அவரது வழியில் வாரிசுகள் ஆன முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன் அன்னதானம் துவங்கி வைத்தார் 

கோவில் தர்மகர்த்தா ராஜா .பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் .பெரியசாமி ஆகியோரின் ஏற்பாட்டிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இன்று மாலை 7.00 மணிக்கு ஸ்ரீ பலிபீட பூஜை, அலங்கார தீபாராதனை மற்றும் நெல்லை 'ரீம்ஸ்' இசைக்குழுவினரின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.



 இந்நிகழ்ச்சிக்கு பழரசம்  P.விநாயகமூர்த்தி தலைமை தாங்க, D.A.தெய்வநாயகம், A.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

video 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் தர்மகர்த்தா ராஜா N.பெரியசாமி தலைமையில் N.செல்லபாண்டி, ஜெகன் பெரியசாமி, A.முத்துசெல்வம், P.ரத்தினசாமி, E.பேச்சிமுத்து, P.செல்வராஜ், R.செல்வகுமார், G.வேல்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள், விழா கமிட்டியினர் சிறப்பாகச் செய்திருந்தனர். கோவில் அர்ச்சகர் K.நெல்லைகுமரன் சுவாமி சிறப்பு வழிபாடுகளை நடத்தி வைத்தார்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

சின்னகண்ணுப்புரம் லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

 📰 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்திகள்

தூத்துக்குடி சின்னகண்ணுப்புரம் லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 

தூத்துக்குடி சின்னகண்ணுப்புரம் அருள்மிகு ஶ்ரீ லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது.



இவ்விழாவை ஆலய பொறுப்பாளர் காளிதுரை  துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஆலய நிர்வாகிகள் கருப்பசாமி, பால சுப்பிரமணியன், கோவிந்த ராஜ், பழனிக்குமார், காளி முத்து, சுரேஷ், நடராஜன், கண்ணன், பால குமார், பரமசிவம், மாரிசெல்வி, ஜீவா, பாக்யலக்ஷ்மி, பூ இசக்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதனுடன் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு விநாயகரின் அருளைப் பெற்றனர்.

புதன், 27 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடி போத்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்

Tamil Nadu updates, photo news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி:ஆகஸ்ட் 27

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் போல்பேட்டை போத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி சிறப்பு அலங்காரத்துடன் மஹா அபிஷேகம் நடைபெற்றது 


பின்னர் நடைபெற்ற தீபாராதனையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, தா்மகா்த்தா ராஜா பொியசாமி, தொழிலதிபர் அசோக் பெரியசாமி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். 



பின்னர் 43 ஆண்டுகளுக்கும் மேல் கோவிலை வழிநடத்திய முன்னாள் தர்மகர்த்தாவும் எம்எல்ஏ-வும், திமுக மாவட்டச் செயலாளருமான பெரியசாமி திடலில் நடைபெற்ற அனைத்து தரப்பினரும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 





விழாவில் கோவில் செயலாளர்கள் செல்வராஜ், செல்வக்குமார், பொருளாளர் வேல்ச்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வம், ரத்தினசாமி, பேச்சிமுத்து, கமிட்டி உறுப்பினா்கள்  ஜீவானந்தம், ராஜாமணி, அசோக், ரவீந்திரன், கீதா முருகேசன், நாராயணன், பாஸ்கா்,  பாலமுருகன், சரவணன், தங்கச்சந்திரன், முருகேசன், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, ராம்குமார், ராஜேந்திரன், அர்ஜூனன், பெரியசாமி, செல்வக்குமார், சித்திரைச்செல்வன், இளஞ்சூரியன், பெரியசாமி, சேகர்மணி, 


கணேஷ், சண்முகசுந்தரம், முத்துராஜா, இளையராஜா, ராஜ்குமார், மாணிக்கம், இளைஞரணியினர் சக்திகணேஷ், சுரேஷ், மகேந்திரன், கண்ணன், கதிரவன், சுப்புராஜ், இசக்கிமுத்து, பால்ராஜ், பிரபாகரன், கற்குவேல் ராஜ், மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, ெபாதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, கவுன்சிலா் ஜாக்குலின் ஜெயா, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, பெருமாள்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் கவுன்சிலா் பொியசாமி, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.