சனி, 19 செப்டம்பர், 2026

தூத்துக்குடியில் தவெக சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு அன்னதானம், நீர்மோர் வழங்கல்

 

தூத்துக்குடியில் தவெக சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னதானம், நீர்மோர் வழங்கல்

தூத்துக்குடி, செப்.20:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்டம் கீழ மேற்கு பகுதி சார்பில் மாபெரும் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.




தூத்துக்குடி விவிடி மெயின் ரோட்டில் அண்ணாநகர் பத்திரகாளியம்மன் கோவில் எதிர்புறம் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமிழக வெற்றிக் கழக மாநில நிர்வாகி எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் தலைமை வகித்து அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

thoothukudileaks


கீழ மேற்கு பகுதி செயலாளர் ஆர். முத்துபாலன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழ மேற்கு பகுதி நிர்வாகி பி.கே. கொம்பையா செய்திருந்தார்.


நிகழ்ச்சியில் மகளிர் அணி ஜஸ்வர்யா இணைச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ராசாசிங், துணைச் செயலாளர் மீட்டன் தினகரன், செயற்குழு உறுப்பினர் செந்தில், வட்டக் கழக செயலாளர் பொன் சிவா, செல்வமணி, ரகு, கோபி, பெத்து ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று சென்றனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக