Tamil Nadu updates,
"தூத்துக்குடி நேதாஜி நகரில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி"
தூத்துக்குடி மாநகராட்சியின் 14-வது வார்டு நேதாஜி நகர் மூன்றாவது தெருவில் உள்ள வாதிரியார் மாயாவாடி பகுதியில் ஒரு காலி மனையில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக மழைநீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
இப்பகுதியில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காய்ச்சல், வாந்தி, பேதி போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டு!!!
இந்த பிரச்சினை குறித்து பொதுமக்கள் மாநகராட்சி ஆணையர், மேயர் மற்றும் மண்டல சுகாதார அலுவலகத்திடம் பலமுறை முறையீடு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரசு அதிகாரி ஒருவருக்கு சொந்தமான இந்த காலி மனையை சுத்தம் செய்யவோ அல்லது உரிமையாளரை கொண்டு சுத்தம் செய்விக்கவோ வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
வேதனையில்... பொதுமக்கள்!!!
ஆனால் வார்டு மாமன்ற உறுப்பினர் உட்பட எந்த அதிகாரிகளும் இதுவரை இப்பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொது சுகாதாரத்தை பாதிக்கும் இந்த பிரச்சினைக்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.png)
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக