தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் உள்ளே திருப்பரங்குன்றம் போராட்டம்: 8 பேர் மீது காவல்துறை நடவடிக்கை
Tamil Nadu updates,
photo news by Arunan journalist
தூத்துக்குடி, பிப். 4-
திருப்பரங்குன்றம் கோயிலில் நடைபெற்ற சர்ச்சை சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடப்பட்டதாகவும், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாகவும் சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
போராட்டம்!!!
இதனைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்த முன்வந்தனர்.
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
தமிழகம் முழுவதும் காவல்துறை கைது நடவடிக்கை!!!
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில்....
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவலிங்கம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ராகவேந்திரா உள்ளிட்ட 8 பேர் திருப்பரங்குன்றம் நோக்கி பயணம் மேற்கொண்டபோது கைது செய்யப்பட்டனர்.
![]() |
| தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் போர்வையில் வருபவர்களை பரிசோதனை பாதுகாப்பு பணியில்.. காவல்துறை!!!.. |
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்
இவர்களில் 5 பேர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தற்போது ஒரு திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக