திங்கள், 2 டிசம்பர், 2024

சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் கலெக்டரிடம் வழங்கிய பரபரப்பு புகார் மனு.தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் குத்தகை நிலத்திற்கு போலி ஆவணங்களை வழங்கிய செயல் அலுவலர் தமிழ்ச்செல்வியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.!

thoothukudi leaks 2-12-2024


தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் குத்தகை நிலத்திற்கு போலி ஆவணங்களை வழங்கிய செயல் அலுவலர் தமிழ்ச்செல்வியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.!

இதுபற்றிய செய்தியாவது:-


இன்று 2-12-2024

தூத்துக்குடி

மாவட்ட ஆட்சியரிடம் மனு.!


தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் மாநகராட்சி பகுதிகள், மாப்பிள்ளையூரணி , வேப்பலோடை, புதியம்புத்தூர், ஏரல் பெருங்குளம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன.


தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கிராமத்திற்கு உட்பட்ட கோமஸ்புரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் புல எண் 130/3 மற்றும் 130/4 ஆகியவை சுமார் 6.51 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்டதாகும்.

இந்து அறநிலையத்துறை 

மேற்கண்ட கோவில் நிலங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் தூத்துக்குடி அருள்மிகு ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலரின் முழு நிர்வாக கட்டுபாட்டின் கீழ் உள்ளது.

தமிழ்செல்வி!!

 இத்திருக்கோவில் நிர்வாக செயல் அதிகாரியாக இருப்பவர் திரு/திருமதி வீ.தமிழ்ச்செல்வி ஆகும். இவரின் நிர்வாக பணியின் கீழ்தான் ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.

போலி ஆவணங்கள் வழங்கல்!!!

இவ்வாறான தூத்துக்குடி கோமஸ்புரம் திருக்கோவில் நிலத்தில் ஐந்தாண்டுகளுக்கு 12×20 அளவு கொண்ட மற்றும் 10×12 அளவு கொண்ட சுமார் 122 வணிக கடைகளும், பல்வேறு இருப்பு வணிக நிறுவனங்களும், ஆட்டுச்சந்தை வணிகம் ஏற்படுத்திட பல்வேறு வகையில் சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், விதிமுறைகளை மீறியும் போலி ஆவணங்கள் வழங்கியுள்ளார்.



உடந்தையாக....?

மேலும் திருக்கோவிலின் புஞ்சை நிலத்தில் வணிக நோக்கில் சட்ட விதிகளை மீறி செயல்பட அதன் புல எண்: 130/3 ன் 4.60 ஏக்கர் நிலத்திற்கு ரூ 10,000/- (பத்தாயிரம் ரூபாய் மட்டும்) முன் தொகையாகவும், புல எண்: 130/4 ன் 1.92 ஏக்கர் நிலத்திற்கு ரூ 10,000/- (பத்தாயிரம் ரூபாய் மட்டும்) முன்தொகையாக பெற்று, அக்கோவில் நிலத்தில் மின் இணைப்பு, ஊராட்சி மற்றும் வருவாய் நிர்வாக ஆவணங்கள் பெற உடந்தையாக இருந்துள்ளார்.

துஷ்பிரயோகம் 

பல லட்சம் நிதி இழப்பு

மேற்படி தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக செயல் அலுவலர் திரு/ திருமதி வீ.தமிழ்ச்செல்வி என்பவர் அமைச்சர், ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், மின்வாரிய அதிகாரிகள் என பல்வேறு அரசு அதிகாரமிக்கவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு, பல லட்சம் ரூபாய் பொருளாதார வருவாய் பெறும் நோக்கில், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் அரசுக்கு பல்வேறு வகையில் பல லட்சம் ரூபாய் வருவாய் நிதியிழப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

பணிநீக்கம் செய்க!!!

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் உயரதிகாரிகள் மேற்கண்ட இந்து சமய அறநிலையத் துறையின் தூத்துக்குடி அருள்மிகு ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக செயல் அலுவலர் வீ.தமிழ்ச்செல்வி மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு பணிநீக்கம் செய்திட வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு...

அக்ரி பரமசிவன்.

02.12.2024


Collectorate Petition: 2024/9005/28/437853/1202 date: 02.12.2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக