ஞாயிறு, 1 டிசம்பர், 2024

தூத்துக்குடி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சேலை வழங்கல் விழா

 தூத்துக்குடி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சேலை வழங்கல் விழா நடைபெற்றது.


இது பற்றிய செய்தியாவது 


தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாப்பிளையூரணி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


மாப்பிள்ளையூரணி சரவணகுமார் தலைமையில்...

விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார் தலைமை வகிக்க, இளைஞரணி துணை அமைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் பால்துரை தலைமையில் 100 தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.


இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.எம்.ஸ்டாலின், வழக்கறிஞர் கிங்ஸ்டன், ஓட்டப்பிடாரம் உதயநிதி ரசிகர் மன்ற பொறுப்பாளர் பாரி, மாப்பிளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


விழாவின் ஏற்பாடுகளை வக்கீல் பால்துரை மேற்கொண்டார், என தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அறிவித்துள்ளது.

Photo news by sunmugasuthram Reporter 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக