தூத்துக்குடி: ஜன17
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். 109வது பிறந்தநாள் விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை சரியாக 10.00 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகம் முன்பும், அதன் பின்னர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு புரட்சித்தலைவரின் புகழை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினர்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தமிழக அரசியலில் மக்கள் முதல்வராக உயர்ந்து சமூக நீதியும் மக்கள் நலத் திட்டங்களும் மூலம் கோடானுகோடி மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர் என நிகழ்ச்சியில் பேசப்பட்டு, அவரது வழியில் கட்சியினர் தொடர்ந்து சேவை செய்ய உறுதி எடுத்தனர்.












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக