தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி
தூத்துக்குடியில் சமய நல்லிணக்க பொங்கல் விழா
தூத்துக்குடி, ஜன.13:
தூத்துக்குடியில் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் சமய நல்லிணக்க பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை (13.01.2026) போல்பேட்டை பகுதியில் உள்ள அய்யா வழி கோவில் (அகில பதி) வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு அய்யா வழி பதி சார்பில் இராமகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து அனைத்து சமயத்தினரும் ஒன்றிணைந்து பொங்கலிட்டு, சமய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.
நிகழ்வில் கணேசன் மற்றும் கிருஷ்ணவேணி சிறப்பு உரையாற்றி, சமய நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து அருட்பணி பென்சிகர் லூசன் அடிகளார், இஸ்லாமிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்சுதீன், கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கத்தின் மா. தங்கையா மின்னல் அம்ஜத், ஜான் பிராயன், ஆறுமுகம், சாமுவேல் காந்தி சன் மாக்க குலம் நற்செய்தி நடுவத்தைச் சேர்ந்த மைக்கிலின் மேரி உள்ளிட்டோர் வாழ்த்துரைகள் வழங்கி பேசினர்.
நிகழ்வின் முடிவில் தங்கையா நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை பல்சமய உரையாடல் பணிக்குழு மற்றும் நற்செய்தி நடுவம், தூத்துக்குடி சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக