வியாழன், 18 செப்டம்பர், 2025

அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் திமுக மீது குற்றச்சாட்டு

தூத்துக்குடி, செப்டம்பர் 18: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆளுங்கட்சி திமுக வினர் மற்றும் அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் இளம்பகவத் நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

thoothukudileaks


## முறைகேடுகள் அளவு கடந்துள்ளது


அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தெரிவிக்கையில், 

"தற்போது திமுக அரசும், அதில் பணியாற்றும் சிலர் செய்யும் முறைகேடுகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கொள்ளையடிப்பதற்கும் கூட்டணி அமைத்து ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்த சிலரும் உடந்தையாக இருந்து வருகின்றனர்" என்றார்.


## மீளவிட்டான் பகுதியில் 97 செண்ட் நிலத்திற்கு பட்டா


மீளவிட்டான் பகுதி-1 கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு அரசு நிலத்தை திமுக கட்சியினர் ஆக்கிரமித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதில் பொன்சிங் மனைவி வீணாம்பிகை சௌதாமினி என்பவருக்கு தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன் கடந்தாண்டு 10.10.2024 அன்று 97 செண்ட் இடத்திற்கு பட்டா வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.


### பட்டா விவரங்கள்:

- பட்டா எண் 1233: 18 செண்ட்

- பட்டா எண் 1231: 3 செண்ட்

- பட்டா எண் 1232: 8 செண்ட்

- பட்டா எண் 1230: 40 செண்ட்

- பட்டா எண் 1229: 7 செண்ட்

- பட்டா எண் 1228: 21 செண்ட்


மொத்தம்: 97 செண்ட்


புகார் அளிக்கப்பட்டுள்ளது


இதுதொடர்பாக இராமச்சந்திரன் என்பவர் மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாவட்ட குற்றப்பிரிவு, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, லஞ்சஒழிப்புத்துறை ஆகியவற்றிற்கு புகார் அளித்துள்ளார். 

thoothukudileaks


அரசு ஆவணமான 'அ' பதிவேட்டில் காலிமனை நத்தம் புறம்போக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலம், கணினியில் பதிவேற்றம் செய்யும்போது தனிநபர் ஒருவருக்கு மாற்றி பட்டா வழங்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.


#கோரம்பள்ளத்திலும் இதே நிலைமை


கோரம்பள்ளம் கிராமம் பகுதி-2-ல் நத்தம் புறம்போக்கு இடம் 2 ஏக்கர் 37 செண்ட் இடத்திற்கும் அதே நாளில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த செல்லப்பாண்டியன், "இந்த புள்ளிவிபரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிந்து நடந்ததா? அல்லது அதிகாரிகளின் உதவியாளர்கள் உத்தரவின் பேரில் நிறைவேறியதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

thoothukudileaks


## நடவடிக்கை கோரிக்கை


தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் அமைச்சர்,சித செல்லப்பாண்டியன் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள சிலரும், திமுக கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக