தூத்துக்குடி லீக்ஸ் செய்தி
சங்கரபேரி பூங்கா ஆட்டைய போட்டுட்டாங்க – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
தூத்துக்குடி: தூத்துக்குடி நகரின் முக்கிய இடமாகத் திகழ்ந்த சங்கரபேரி பூங்கா தற்போது ஆட்டைய போடப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த பதிலில், அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் எனவும், பூங்கா இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பூங்கா இருப்பது தகவல் உரிமை சட்டம் பதில் பார்க்கதூத்துக்குடியில் உள்ள கோயம்பேடு டாஸ்மாக் அருகே இந்த பூங்கா இருக்கிறது
இதுபோன்ற நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ஜிஜிபி (JCB) இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்யப்படுவது யார் சார்பாக நடைபெறுகிறது என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
“அரசு தரப்பா? அல்லது ஆக்கிரமிப்பு கும்பலா?” என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்கம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
👉




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக