தூத்துக்குடி லீக்ஸ் செய்தி
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி கணேசபுரத்தில், பாலஅருண் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆண்களுக்கான கபாடி போட்டி நடைபெற்றது.
போட்டியில் முதலிடம் ஜெயசேகரன் முப்புலிவெட்டி அணி, இரண்டாம் இடம் அருண் பிரதர்ஸ் அணி, மூன்றாம் இடம் எம்எஸ்டி மாதாநகர் அணி, நான்காம் இடம் வெள்ளையன் கன்னியாகுமரி அணி தட்டி சென்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை மாப்பிள்ளையூரணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார், தொழிலதிபர்கள் பொன்முருகன், சிவக்குமார், வக்கீல் மால் முருகபாண்டியன், பால அருண், சங்கர்ராஜ், பழனி, ராஜேஸ்குமார், இராஜபூபதி உள்ளிட்டோர் வழங்கினர்.
விழாவில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தங்கமாரிமுத்து, திமுக ஒன்றிய துணை செயலாளர் ராமசந்திரன், வழக்கறிஞர்கள் அர்ஜீன், கருப்பசாமி, கணேசபுரம் ஊர்தலைவர் இளங்கோ, நித்தியானந்தம், சந்தனராஜ், சந்தனசேகர், பேச்சிமுத்து, பூபதிராஜா, ஜெயகணேஷ், சண்முகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை அருண் பிரதர்ஸ் கபாடி குழுவும், இளைஞர் அணியினரும் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக