தூத்துக்குடி மாவட்டம் : 20.09.2025
தூத்துக்குடி செப் 20
தூத்துக்குடி மாவட்டத்தில் "காவல் நிலையம் வந்த இருவர் மரணம்" என பிரபல செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி தொடர்பாக மாவட்ட காவல்துறை மறுப்பு வெளியிட்டுள்ளது.
விஷம் அருந்தியவர்கள் கதறல்!!!
குலசேகரன்பட்டினம் காவல் நிலைய நுழைவாயிலுக்கு ...
இன்று (20.09.2025) காலை ஒரு ஆண், ஒரு பெண் இருவரும் ஒன்றாக வந்து, “நாங்கள் விஷம் அருந்தியுள்ளோம், எங்களை காப்பாற்றுங்கள்” என தெரிவித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ்!!!
உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் அருகிலிருந்த ஆட்டோ மூலம் விரைவாக குலசேகரன்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
வீடியோ பார்க்கஆம்புலன்ஸ் போகும் வழியில் இறப்பு!!!
பின்னர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் வழியில் இருவரும் உயிரிழந்தனர்.
தகாத உறவு
விசாரணையில், உயிரிழந்தவர்கள் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கவேல்சாமி (28) மற்றும் திருமணமான ஒரு பெண் என்பதும், அவர்கள் இருவரும் திருமணத்திற்கு வெளியே உறவில் இருந்து வந்ததுமாக தெரியவந்துள்ளது.
டிவி வெளியிட்ட செய்தி!!!
இந்த நிலையில், "காவல் நிலையம் வந்த இருவர் மரணம்" என உண்மை தன்மையை அறியாமல் செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி செய்தியை மாவட்ட காவல்துறை மறுத்துள்ளது.
மறுப்பு !!!
மேலும், “இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. உண்மைத்தன்மை உறுதிசெய்யாமல் வதந்தி பரப்ப வேண்டாம்” எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
இச் செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது .
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக