சனி, 20 செப்டம்பர், 2025

கடந்த எட்டு ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி மூலம் மக்களை சுரண்டியது மத்திய அரசின் சாதனை" - அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு

தூத்துக்குடி, செப் 21

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் தூத்துக்குடி 12 வது மையவாடி அருகே உள்ள மைதானத்தில் 20-9-2025 நேற்று இரவு நடைபெற்றது  

பொதுக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். 



மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பொரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


திட்ட உறுப்பினர் சேர்க்கை விழா


வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கையை சிறப்பாக செய்த தொகுதிக்கு 15 பேர் வீதம் மொத்தம் 45 பேருக்கு சேலை வேஷ்டி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.


 அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்புகள்


 திராவிட மாடல் ஆட்சி பற்றி


"40 சதவீதம் மக்கள் தமிழ்நாட்டில் திமுகவின் 'ஓரணியில் தமிழ்நாடு' திட்டத்தில் இணைந்துள்ளனர். காரணம் தமிழ்நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக," என்று அமைச்சர் தெரிவித்தார்.


 கீழடி அகழ்வாராய்ச்சி விவகாரம்


கீழடி அகழ்வாராய்ச்சியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சமுதாயம் வீடு கட்டி வாழ்ந்துள்ளது என்ற ஆய்வு முடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பதாகவும், ஆனால் மோடி அரசு அதை அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.


நீட் தேர்வு எதிர்ப்பு


"தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவ கல்லூரி உள்ளது. மருத்துவர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்காக நீட் தேர்வைக் கொண்டு வந்து கிராமப்புறத்தில் உள்ள படித்த மாணவர்களை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு நீட் தேர்வை அறிவித்துள்ளது," என்று விமர்சித்தார்.

video 

ஜிஎஸ்டி வரி விவகாரம்

"கடந்த எட்டு ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி மூலமாக மக்களை சுரண்டியது மத்திய அரசு"

என்று கடுமையாக தாக்கினார். தற்போது நான்கு மாநிலங்களில் தேர்தல் வருவதால் மோடி அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.


சுங்கச்சாவடி கட்டணம்


மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தியுள்ளதால் லாரி வாடகை உயர்ந்து, அதன்மூலம் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும் என்று எச்சரித்தார்.


தமிழக அரசின் சாதனைகள்

பொருளாதார முன்னேற்றம்


- தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது

- ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்

- மோட்டார் வாகன உற்பத்தி அதிகம்

- வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது


நலத்திட்டங்கள்


- தாயுமானவன் திட்டத்தின் கீழ் பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்கு ₹2000 உதவி

- மகளிர் உரிமைத்தொகை

- பாலுக்கு ₹3 விலை குறைப்பு


கொரோனா கால நடவடிக்கைகள்


கொரோனா காலத்தில் ரேஷன் கடை மூலம் மக்களுக்கு ₹4000 வழங்கப்பட்டது. வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டு பொருளாதாரம் உயர்த்தப்பட்டது.

 

வெள்ள நிவாரணம்


தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுத்து அனைவரும் மீட்கப்பட்டனர். உப்பள தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வெள்ள நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது.


எதிர்கட்சிகள் மீதான விமர்சனம்


பாஜக அரசு மீது....


- கல்வி கடன் ரத்து செய்ய மறுப்பு

- பெரிய தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி

- இல்லாத குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்துதல்


அதிமுக மீது....


எடப்பாடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வெளிப்படையாக சொல்லாமல் முகத்தை மூடிக்கொண்டு சந்திப்பதாக விமர்சித்தார். அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார் என்று குற்றம்சாட்டினார்.


 2026 தேர்தல் அறிவிப்பு


"2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆட்சிக்கட்டில் அமரவைக்க அனைவரும் சபதம் ஏற்று இந்த மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வென்று முதலமைச்சர் காலடியில் சமர்ப்பிப்போம்," என்று உறுதியளித்தார்.


மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-


"கூட்டணியை பொறுத்தவரையில் தலைவர் பார்த்துக்கொள்வார். நாம் செய்ய வேண்டிய கடமை ஒவ்வொருவரும் 50 லிருந்து 100 வாக்குகள் சேகரித்தால் போதும், எதிர்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்கலாம்," என்று தெரிவித்தார்.


 கூட்டத்தில் பங்கேற்பு


கூட்டத்தில் மாநில பேச்சாளர்கள் ஆண்டாள் பிரியதர்ஷினி, சரத்பாலா, இருதயராஜ், தமிழ்ப்ரியன் உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட, மாநகர மற்றும் தொகுதி அளவிலான அமைப்பாளர்கள், கவுன்சிலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக