தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்
news by Arunan journalist
தூத்துக்குடி மாவட்டம் : 22.09.2025
பெண்கள் அதிகாரமளிப்பை முன்னெடுக்கும் வகையில், ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ் சார்பில் நடைபெற்ற கார் ராலி உலகச் சாதனையாகப் பதிந்துள்ளது.
தூத்துக்குடியில் தொடங்கி கன்னியாகுமரியில் நிறைவடைந்த இந்த ராலி, இடையே பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கோவா, மங்களூர், காளிக்கட், கொச்சி உள்ளிட்ட பல நகரங்களை கடந்து, மொத்தம் 4600 கிலோமீட்டர் தூரத்தில் பெண்கள் விழிப்புணர்வு செய்தியுடன் பங்கேற்றனர்.
உலக சாதனை!!!
இந்நிகழ்ச்சி குளோபல் வேர்ல்ட் ரெகார்ட் பெருமையைப் பெற்றுள்ளது.
கெளரவிப்பு!!!
சாதனைக்காக ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ் தலைவர் பிரினா பிரபாகரன், செயலாளர் இனிகோ கார்டோஸா, தூத்துக்குடி லெஜெண்ட் தலைவர் பிரேம் பிரபாகரன், செயலாளர் ஜினோ ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
பாராட்டு!!!
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வில்லியம் மருத்துவமனை இயக்குனர் சூசன் வில்லியம், “பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை” என பாராட்டினார்.
மேலும், சாதனையாளர்கள், மண்டலம் 18
தலைவர் சரவணகுமார் தொடர்ந்து வழங்கிய ஊக்கமும் வழிகாட்டுதலுமே இந்த சாதனைக்கு காரணம் என நன்றியுடன் குறிப்பிட்டனர்.
மண்டலம் 18 முன்னாள் தலைவர் சிபி உரையாற்றி, “பெண்கள் சமூக முன்னேற்றத்தில் முன்னணியில் செயல்பட வேண்டும்” என ஊக்குவித்தார்.
தவப்புதல்வி அமைப்பின் தலைவர், பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை (பயோனியர் குமாரசுவாமி கல்லூரி, நாகர்கோவில்),
“இச்சாதனை பெண்களின் திறமையை உலகளவில் வெளிப்படுத்தும் முன்னோடி படி” என வலியுறுத்தினார்.
பெண்கள் கல்வி, சமூக முன்னேற்றம், தொழில்முனைவு, அதிகாரமளிப்பு ஆகிய அனைத்திலும் இந்த கார் ராலி ஒரு முன்னோடி உலகச் சாதனையாக பதிந்துள்ளது.
👉
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக