பேருந்து நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேருந்து நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

ஏரல் அருகே அரசு பேருந்து பிரேக் டவுன் - பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை

 தூத்துக்குடி லீக்ஸ் 17 -2-2025

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 


ஏரல் அருகே அரசு பேருந்து பிரேக் டவுன் - பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை

சாயர்புரம், பிப்ரவரி 17: தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது வணிக நகரமாக விளங்கும் ஏரலில் இருந்து திருவைகுண்டம் மற்றும் ஆத்தூர் பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்கும் நிலை தொடர்கிறது.



 இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், 28A என்ற அரசு பேருந்து ஆத்தூரில் இருந்து திருவைகுண்டம் செல்லும் வழியில் வாழவல்லான் பகுதியில் பழுதாகி நின்றது. 


இதில் பயணித்தவர்கள் புதுமனை, அம்மாள் தோப்பு ஆகிய ஊர்களை கடந்து, ஏரல் பேருந்து நிலையம் வரை நடைபயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேபோல், நேற்று (16-2-2025) ஏரல் காவல் நிலையம் அருகே ஏரல்-திருவைகுண்டம் வழித்தடத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் பேருந்து நிலையம் வரை நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டது. இதுவே தொடர்ந்து நடப்பதால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலை தொடராமல் இருக்க, பழுதாகும் பழைய பேருந்துகளை ஒதுக்கி, புதிய பேருந்துகளை இயக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றங்கள் தேவையா?

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

தூத்துக்குடி: புதிய பேருந்து நிலையத்தில் "யூத் சலூன்" திறப்பு

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி: புதிய பேருந்து நிலையத்தில் "யூத் சலூன்" திறப்பு



இளைய சமுதாயம்  

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள "யூத் சலூன்" இன்று 15-12-2024 ஞாயிறு திறக்கப்பட்டது.


 இந்த சலூன், இளைய சமுதாயத்திற்கேற்ப நவீன உள் கட்டமைப்புகளை வழங்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.

எங்குமில்லாத நவீன கட்டமைப்பு 

சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த சலூன், நவீன வசதிகளுடன் கூடியது.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே .... "யூத் சலூன்" 

  

தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதியான தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்  உள்பகுதியில் அமைந்துள்ளதால், இது பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன முறையில் பல சலுகைகள் வழங்கப்படுவதாக சுதீப் தெரிவித்தார் கள்.


சலூன் திறப்பு விழாவில் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.


வரவேற்பு 

இந்நிகழ்ச்சியில் யூத் சலூன்

 சார்பில் 

சு.சுதிப்

சு.அஸ்வின்

சு. பேச்சீராஜ்

பா சண்முக சுந்தரம்

ரா சஞ் சய்

வீ.ஸ்ரீராம்

ப ராகுல். ஆகியோர் கலந்து கொண்டவர்களை வரவேற்றனர் .


சனி, 7 செப்டம்பர், 2024

குட்டி ஸ்டோரி?தூத்துக்குடி மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

7-9-2024 photo news 

by Arunan journalist 

தூத்துக்குடி மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட்



ஒரு  குட்டி ஸ்டோரி!!!

next news 


தூத்துக்குடியில்...

(கூட்டமில்லாத ட்ரிப் ல)

ஒரு மினிபஸ் ல 

டாஸ்மாக் குடிமகன்  & கண்டக்டர் 

சுவாரஸ்யமான உரையாடல் 


குடிமகன்:-  இந்தா ப்பா மாட்டு தாவணி க்கு ஒரு டிக்கெட் கொடு 


கண்டக்டர் : என்னென்னே சொல்ற


குடிமகன்:- அதாம்பா நம்ம மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட் 



கண்டக்டர் :-

ஒ அது வா  தந்துடுறேன் 


இந்தா பிடி  புது பஸ்ஸ்டாண்ட் டிக்கெட் 



குடிமகன்:- 

ஒகே யப்பா


கண்டக்டர்:- 

உன்ன மாதிரி தான் அண்ணே  

இப்ப எல்லாரும் டிக்கெட் கேட்கிறாக

என்னத்த சொல்ல!!!



குடிமகன்: நாங்க யாருன்னு தெரியுமா கப்பல்ல இங்க ஹிட்லர் வந்தப்ப ... 


கண்டக்டர்:- வந்தாரா!!!!


குடிமகன்:- நம்ம ஊரு கடலில் கப்பல் ல வந்தாரு 

இப்பவும் நேரே போ கடல் தெரியும் 

அப்ப ஹிட்லர் விரும்பி கேட்டார் கிட் கேட் சாக்லேட்   


அப்ப கூட ..

இந்தியா வேனுமா இலங்கை வேனுமா அவரு கேட்டப்ப எங்க தாத்தன் வேணாம்னு சொல்லிட்டாரு


கண்டக்டர்:- ஏன் அண்ணே?


குடிமகன்:- அப்பவே வாங்கி போட்டு இருக்கலாம்...?

ச்சே மிஸ் பண்ணிட்டாங்க 

ஹிட்லர் ரொம்ப நல்ல மனுஷன் தீடீர்ன்னு தற்கொலை பண்ணி செத்துட்டாரு

 

ஹிட்லர் போட்டோ  பாக்குறியா என் செல் போன் ல


கண்டக்டர்:- அண்ணே கொஞ்சம் கம் ன்னு வாண்னே 


இதோ நீ கேட்ட மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட் வந்துட்டு இறங்கு!!!

தள்ளாடி இறங்கும் போது... கண்டக்டர் கொஞ்சம் சத்தமாக 

அண்ணே உங்க கட்சி தலைவரை நான் கேட்டதாக சொல்லு?

காதில் கேட்ட குடிமகன் யூட்டனாக மினிபஸ் நோக்கி திரும்பி வர... 



மினிபஸ் மின்னல் வேகமெடுத்தது



இப்படி தான் மாறி போச்சு ங்க


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்



next news 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் 

பசு மாடுகள் அங்குமிங்கும் திரிகின்றன 

குறிப்பாக.. வேகமாக வரும் பஸ் 🐄 மாடுகள் முன் வந்து போவதால் விபத்து ஏற்படலாம் 

இதே போல...

மதுரை பஸ் க்காக இருக்கையில் காத்திருக்கும் பயணிகள் இன்று தள்ளி விட்டு மாடுகள் செல்கிறது 

சிறு குழந்தைகள் வேறு நடமாட்டம்.




இஃது போன்று தமிழகத்தில் எந்த மாநகராட்சி பஸ் நிலையத்திலும் இந்த நிலை இல்லை 

இன்று 7-9-2024 இருக்கையில் காத்திருக்கும் மதுரை பயணிகளை இடித்து கடந்து செல்லும் 🐄 மாடுகள் 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே 🐄 மாடுகள் திரிவதை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறதா என மதுரை செல்லும் பயணி பேசுகையில் ....

மதுரை யில் மாட்டு தவணி இருந்த இடத்தில் மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட் வந்த போதும்...அதன் எல்லை யில் ஒத்த மாடு கூட இப்படி சுற்றி திரியாது 

இது வீடியோ அழுத்தி பார்க்க...


சாலையில் சுற்றி திரியும் மாடுகள் பிடித்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.

இப்போது... மதுரை மாட்டு தாவணி பேருந்து நிலையம் 

எம்ஜிஆர் பேருந்து நிலையம் ஆக பெயர் மாற்றி ட்டாங்க ....

இது வீடியோ அழுத்தி பார்க்க...

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் இங்கு 🐄 மாடுகள் சுற்றி திரிவதை தூத்துக்குடி மாநகராட்சி தடுக்காமல் ஏன் விட்டு வைக்கிறது புரியல என கேள்வி எழுப்பினார் .






ஞாயிறு, 10 மார்ச், 2024

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் . மேயர் ஜெகன் பெரியசாமி இரண்டு விற்பனை கடைகள் திறப்பு

கருப்பட்டி விற்பனை  கடை அண்ட் ஸ்ரீ லெட்சுமி பேன்ஸி & புட் கேர் திறப்பு விழா  மேயர் ஜெகன் பெரியசாமி  தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் ஆரம்பித்து வைத்தார்.



இதுபற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே PSB கருப்பட்டி விற்பனை கடை இன்று 11-3-2024 காலை 10 மணியளவில் மேயர் ஜெகன் பெரியசாமியால் திறக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி அங்குள்ளவர்களிடம் கருப்பட்டி துண்டுகளை வழங்கி பொதுமக்கள் அனைவரும் மனித உடலுக்கு வலுசேர்க்கும் தரமாக கருப்பட்டி வாங்கி உபயோகிக்குமாறு கேட்டு கொண்டார்.


நிகழ்ச்சி ஏற்பாடுகள செய்த விற்பனையாளர் PSB ராஜா இங்குஉடன்குடி - வேம்பார் பகுதி தயாரிக்கப்படும் சுத்தமான நம் உடலுக்கு வலுசேர்க்கும் தாமான கருப்பட்டி அச்சுவெல்லம் பனங்கற்கண்டு சர்க்கரை  சில்லு கருப்பட்டி என அனைத்து வகைகளும் கிடைக்கும் பொது மக்கள் அனைவரும் வாங்கி பயன்பெறுமாறு கேட்டு கொண்டார்.




அடுத்தாக ஸ்ரீலெட்சுமி பேன்ஸி & புட் வேர்  விற்பனை கடையை மேயர் ஜெகன் பெரியசாமி  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சி  ஏற்பாடு ஸ்ரீ லெட்சுமி ஃபே பேன்ஸி உரிமையாளர் A.ராஜ்குமார்

தங்கள் கடையில்

புத்தம்புது டிசைனில் அனைத்து வகையான பொருட்களும் குறைவான விலையில் கிடைக்கும் அனைவரும் அழகுபொருட்கள் பயன்பெறுமாறு கேட்டு கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 8 மார்ச், 2024

வள்ளியூரை புறக்கணிக்கும் பேருந்துகள்.... அல்லல் படும் பொதுமக்கள்..

மீண்டும் வள்ளியூரை புறக்கணிக்கும் பேருந்துகள்....

அல்லல் படும் பொதுமக்கள்..



இது பற்றிய செய்தியாவது :-

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் முறையாக வந்து செல்ல வேண்டுமென கடந்த 2023 வருடம் ஜூன் மாதம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் PDP.சின்னதுரை தலைமையில் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டு பேருந்துகள் முறையாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.



 இதனைத் தொடர்ந்து 2023 ஜூலை மாதம் சபாநாயகர் அப்பாவு, சசிகுமார் துணை மேலாளர் வணிகம் முன்னிலையில் போக்குவரத்துக் கழக அதிகாரிகளோடு வள்ளியூர் பயணியர் விடுதியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று போடப்பட்டு நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் 18 END TO END பேருந்துகளை தவிர மற்ற அனைத்து பேருந்துகளும் வள்ளியூர் ஊருக்குள் வந்து செல்ல வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன்படி கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக பேருந்துகள் வள்ளியூர் ஊருக்குள் முறையாக வந்து சென்றது..

அரசு உத்தரவு 

 ஆனால் தற்பொழுது கடந்த சில மாதங்களாகவே மீண்டும் வள்ளியூர் ஊருக்குள் பேருந்துகள் வராமல் புறவழிச் சாலையில் செல்ல துவங்கி உள்ளதால் மக்கள் கடும் அவதிக்க ஆளாகின்றனர்.


 குறிப்பாக மதுரை மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் கோவை மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் வள்ளியூர் ஊருக்குள் வருவதில்லை,


 நேற்று மதியம் திருநெல்வேலியில் இருந்து மதுரை மண்டல பேருந்தில் (TN 58 N 2404) ஏறிய வள்ளியூர் பயணிகள் 12 பேரை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இணைந்து வள்ளியூர் போகாது எனக் கூறி திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வெளியே இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.


இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி தெற்கு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் PDP சின்னதுரை சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக சசிகுமார்துணை மேலாளர் வணிகம் அதிகாரியிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.



இன்று மதியம் அதே மதுரை மண்டலத்தை சேர்ந்த TN 58 N 2482 பேருந்து மதியம் திருநெல்வேலியில் இருந்து குமார் 15 பயணிகள் ஏறிய நிலையில் 15 பயணிகளையும் வள்ளியூர் போகாது எனக்கூறி கீழே இறக்கி விட்டு சென்றுள்ளார். அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து பழனி பணிமனையில் இருந்து இயக்கப்படும் நாகர்கோவில் பழனி பேருந்து வள்ளியூர் போகாது எனக் கூறி நடத்துனர் தகராறில் ஈடுபட்டு.

அதிகாரியிடம் முறையிட்டு அதன் பின்பு தான் பேருந்தானது வள்ளியூர் ஊருக்குள் வந்து சென்றது.

தொடர்ந்து இதுபோன்று வள்ளியூர் வளர்ச்சியை தடுக்கும் விதத்திலும் வள்ளியூரை புறக்கணிக்கும் விதத்திலும் அதிகாரிகள் ஈடுபடுவது மிகவும் வேதனையடைய செய்துள்ளது என்கிறார்கள்.