▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
7-9-2024 photo news
by Arunan journalist
தூத்துக்குடி மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட்
ஒரு குட்டி ஸ்டோரி!!!
next news
தூத்துக்குடியில்...
(கூட்டமில்லாத ட்ரிப் ல)
ஒரு மினிபஸ் ல
டாஸ்மாக் குடிமகன் & கண்டக்டர்
சுவாரஸ்யமான உரையாடல்
குடிமகன்:- இந்தா ப்பா மாட்டு தாவணி க்கு ஒரு டிக்கெட் கொடு
கண்டக்டர் : என்னென்னே சொல்ற
குடிமகன்:- அதாம்பா நம்ம மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட்
கண்டக்டர் :-
ஒ அது வா தந்துடுறேன்
இந்தா பிடி புது பஸ்ஸ்டாண்ட் டிக்கெட்
குடிமகன்:-
ஒகே யப்பா
கண்டக்டர்:-
உன்ன மாதிரி தான் அண்ணே
இப்ப எல்லாரும் டிக்கெட் கேட்கிறாக
என்னத்த சொல்ல!!!
குடிமகன்: நாங்க யாருன்னு தெரியுமா கப்பல்ல இங்க ஹிட்லர் வந்தப்ப ...
கண்டக்டர்:- வந்தாரா!!!!
குடிமகன்:- நம்ம ஊரு கடலில் கப்பல் ல வந்தாரு
இப்பவும் நேரே போ கடல் தெரியும்
அப்ப ஹிட்லர் விரும்பி கேட்டார் கிட் கேட் சாக்லேட்
அப்ப கூட ..
இந்தியா வேனுமா இலங்கை வேனுமா அவரு கேட்டப்ப எங்க தாத்தன் வேணாம்னு சொல்லிட்டாரு
கண்டக்டர்:- ஏன் அண்ணே?
குடிமகன்:- அப்பவே வாங்கி போட்டு இருக்கலாம்...?
ச்சே மிஸ் பண்ணிட்டாங்க
ஹிட்லர் ரொம்ப நல்ல மனுஷன் தீடீர்ன்னு தற்கொலை பண்ணி செத்துட்டாரு
ஹிட்லர் போட்டோ பாக்குறியா என் செல் போன் ல
கண்டக்டர்:- அண்ணே கொஞ்சம் கம் ன்னு வாண்னே
இதோ நீ கேட்ட மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட் வந்துட்டு இறங்கு!!!
தள்ளாடி இறங்கும் போது... கண்டக்டர் கொஞ்சம் சத்தமாக
அண்ணே உங்க கட்சி தலைவரை நான் கேட்டதாக சொல்லு?
காதில் கேட்ட குடிமகன் யூட்டனாக மினிபஸ் நோக்கி திரும்பி வர...
மினிபஸ் மின்னல் வேகமெடுத்தது
இப்படி தான் மாறி போச்சு ங்க
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்
next news
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்
பசு மாடுகள் அங்குமிங்கும் திரிகின்றன
குறிப்பாக.. வேகமாக வரும் பஸ் 🐄 மாடுகள் முன் வந்து போவதால் விபத்து ஏற்படலாம்
இதே போல...
மதுரை பஸ் க்காக இருக்கையில் காத்திருக்கும் பயணிகள் இன்று தள்ளி விட்டு மாடுகள் செல்கிறது
சிறு குழந்தைகள் வேறு நடமாட்டம்.
இஃது போன்று தமிழகத்தில் எந்த மாநகராட்சி பஸ் நிலையத்திலும் இந்த நிலை இல்லை
இன்று 7-9-2024 இருக்கையில் காத்திருக்கும் மதுரை பயணிகளை இடித்து கடந்து செல்லும் 🐄 மாடுகள் |
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே 🐄 மாடுகள் திரிவதை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறதா என மதுரை செல்லும் பயணி பேசுகையில் ....
மதுரை யில் மாட்டு தவணி இருந்த இடத்தில் மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட் வந்த போதும்...அதன் எல்லை யில் ஒத்த மாடு கூட இப்படி சுற்றி திரியாது
சாலையில் சுற்றி திரியும் மாடுகள் பிடித்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.
இப்போது... மதுரை மாட்டு தாவணி பேருந்து நிலையம்
எம்ஜிஆர் பேருந்து நிலையம் ஆக பெயர் மாற்றி ட்டாங்க ....
இது வீடியோ அழுத்தி பார்க்க...தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் இங்கு 🐄 மாடுகள் சுற்றி திரிவதை தூத்துக்குடி மாநகராட்சி தடுக்காமல் ஏன் விட்டு வைக்கிறது புரியல என கேள்வி எழுப்பினார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக