மீண்டும் வள்ளியூரை புறக்கணிக்கும் பேருந்துகள்....
அல்லல் படும் பொதுமக்கள்..
இது பற்றிய செய்தியாவது :-
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் முறையாக வந்து செல்ல வேண்டுமென கடந்த 2023 வருடம் ஜூன் மாதம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் PDP.சின்னதுரை தலைமையில் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டு பேருந்துகள் முறையாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து 2023 ஜூலை மாதம் சபாநாயகர் அப்பாவு, சசிகுமார் துணை மேலாளர் வணிகம் முன்னிலையில் போக்குவரத்துக் கழக அதிகாரிகளோடு வள்ளியூர் பயணியர் விடுதியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று போடப்பட்டு நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் 18 END TO END பேருந்துகளை தவிர மற்ற அனைத்து பேருந்துகளும் வள்ளியூர் ஊருக்குள் வந்து செல்ல வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன்படி கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக பேருந்துகள் வள்ளியூர் ஊருக்குள் முறையாக வந்து சென்றது..
அரசு உத்தரவு |
ஆனால் தற்பொழுது கடந்த சில மாதங்களாகவே மீண்டும் வள்ளியூர் ஊருக்குள் பேருந்துகள் வராமல் புறவழிச் சாலையில் செல்ல துவங்கி உள்ளதால் மக்கள் கடும் அவதிக்க ஆளாகின்றனர்.
குறிப்பாக மதுரை மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் கோவை மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் வள்ளியூர் ஊருக்குள் வருவதில்லை,
நேற்று மதியம் திருநெல்வேலியில் இருந்து மதுரை மண்டல பேருந்தில் (TN 58 N 2404) ஏறிய வள்ளியூர் பயணிகள் 12 பேரை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இணைந்து வள்ளியூர் போகாது எனக் கூறி திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வெளியே இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி தெற்கு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் PDP சின்னதுரை சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக சசிகுமார்துணை மேலாளர் வணிகம் அதிகாரியிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் அதே மதுரை மண்டலத்தை சேர்ந்த TN 58 N 2482 பேருந்து மதியம் திருநெல்வேலியில் இருந்து குமார் 15 பயணிகள் ஏறிய நிலையில் 15 பயணிகளையும் வள்ளியூர் போகாது எனக்கூறி கீழே இறக்கி விட்டு சென்றுள்ளார். அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பழனி பணிமனையில் இருந்து இயக்கப்படும் நாகர்கோவில் பழனி பேருந்து வள்ளியூர் போகாது எனக் கூறி நடத்துனர் தகராறில் ஈடுபட்டு.
அதிகாரியிடம் முறையிட்டு அதன் பின்பு தான் பேருந்தானது வள்ளியூர் ஊருக்குள் வந்து சென்றது.
தொடர்ந்து இதுபோன்று வள்ளியூர் வளர்ச்சியை தடுக்கும் விதத்திலும் வள்ளியூரை புறக்கணிக்கும் விதத்திலும் அதிகாரிகள் ஈடுபடுவது மிகவும் வேதனையடைய செய்துள்ளது என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக