thoothukudi leaks
10-3-2024
news by
Shanmuga Sundaram reporter
தூத்துக்குடி மாநகராட்சி பகுதி சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணியை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு கட்டமைப்புகள் துறைமுகம், விமான நிலையம், தேசியநெடுஞ்சாலை, இரயில்வே நிலையம் இருப்பதால் உலக அளவில் ஏற்றுமதி இறக்குமதி நிறைந்தது.
இந்தியாவில் பொிய துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் வளர்ந்து வருகிறது. இதற்கிடையில் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கும் அப்பணிகள் முடிவு பெற்று துவங்கும் போது பல்லாயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெரும் சூழ்நிலை இருக்கிறது.
மாவட்டத்தில் தலைநகரமாக தூத்துக்குடி விளங்குவதால் சா்வதேச அளவிற்கு எதிர்காலத்தில் மாநகராட்சி வளர்ச்சியடைவது மட்டுமின்றி வௌிநாட்டினர் அதிக அளவில் வந்து செல்லும் வாய்ப்பை கூடுதலாக பெரும் நிலை இருப்பதால் மாநகராட்சி பகுதியை சிங்கப்பூராக மாற்ற வேண்டும். என்ற தொலைநோக்கு பார்வையோடு மாநகர பகுதிக்குள் இருக்கும் தேவையற்ற சுவர்களில் ஜாதி மத விளம்பரங்கள் சுவரொட்டிகள் ஓட்டுவதன் மூலம் அழகு கெடும் வகையிலும் சில சமயங்களில் சர்சை சம்பவங்களும் ஏற்படுவதை தடுக்கும் விதமாக பல்வேறு வண்ணசித்திரங்கள வரைந்து மாநகரை அழகுப்படுத்தும் வகையில் அதில் ஒரு பகுதியாக மாநகரில் அமைந்துள்ள பாலங்களின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணியை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார்.
இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன்,மேயர்கெ ஜெகன் பெரியசாமி,மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, கோட்டாட்சியர் பிரபு, துணை மேயர் ஜெனிட்டா, பொறியாளர் சரவணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் இசக்கிராஜா, வட்டச்செயலாளர் செல்வராஜ், மற்றும் கருணா, பிரபாகர், ஜோஸ்பர், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக