வியாழன், 7 மார்ச், 2024

என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்க குறைகளை என்னிடம் சொல்லுங்கள் திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள் & எங்கள் ஊர் மேயர்' கல்லூரி மாணவிகள் கேள்வி-பதில் மகளிர் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி !!"

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂

news by

Shanmuga Sundaram Reporter




உங்க  குறைகளை என்னிடம் சொல்லுங்கள் திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள் 

மேயர் ஜெகன் பொியசாமி  பேசினார்.

பின்பு இன்று 8-3-2024 மகளிர் தின விழாவில்..."எங்க ஊர் மேயர்" கல்லூரி மாணவிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.



இது பற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆலோசனை படி மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 4,5,6,7,8,9,10,11,12,13,20,21, ஆகிய பகுதிகளில் உள்ள கவுன்சிலர்கள் வட்டச்செயலாளர்கள் வட்டப்பிரதிநிதிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போல்பேட்டை கீதாஹோட்டல் மைதானத்தில் மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் நடைபெற்றது.


     அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் பலருக்கு சென்றடையாத மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டன.


 அப்போது பேசிய கவுன்சிலர்கள் உள்பட திமுகவினர் தங்களது பகுதிகளில் வைத்த கோாிக்கைகளை நிறைவேற்றி கொடுத்ததற்கு நன்றி தொிவித்தது மட்டுமின்றி செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் கோாிக்கையாக தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.



    அனைவரது குறைகளையும் குறிப்பெடுத்துக் கொண்டு மேயர் ஜெகன் பொியசாமி பேசகையில் ...


திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் பதவியேற்ற காலத்தில் கொரானா என்ற கொடிய நோயிலிருந்து மக்களை பாதுகாத்து அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடின்றி நான்காயிரம் வீதம் வழங்கினார்.


அதன் பின் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக செயல்பட்டு எல்ேலாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உாிமைத்தொகை இலவச பேருந்து புதுமைப்பெண் திட்டம், இல்லம் தோறும் கல்வி, மருத்துவம், நான்முதல்வன், திறன் மேம்பாட்டு பயிற்சி, என பல சாதனைகளை செய்துள்ள முதலமைச்சர் மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கும் நிதி ஓதுக்கீடு செய்து பல்வேறு கட்டமைப்பு பணிகளை மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதின்படி கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் மக்களுக்கான பணிகளை செய்யாமல் இருந்து வந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதில் வெற்றி பெற்று பதியேற்ற பின் முறையாக பாராபட்சமின்றி அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை தேவையான கால்வாய், சாலை, மின்விளக்கு, மாசு இல்லாத, மாநகரை உருவாக்கும் வகையில் மரக்கன்று நடுதல் நெகிழிகளை தவிர்த்து மஞ்சள் பை உபயோகித்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு புறநகர் பகுதியாக இருக்க கூடிய சங்கரபோி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், முத்தையாபுரம், முள்ளக்காடு வரை கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தி விரைவு படுத்தியுள்ளோம்.


 அதிலும் குறிப்பாக தனசேகரன்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் புதிய பூங்காக்கள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் நடைபயிற்சியும் பல விளையாட்டுகள் மூலம் பயனடையும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.


பழைய தூத்துக்குடி பகுதி விாிவாக்கம் செய்வதற்கு வழியில்லை. போக்குவரத்து நொிசல் இல்லாத படி சாலைகளின் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.



 புறநகர் பகுதிதான் விாிவான பகுதியாக அமையபெற்றுள்ளது.


 உப்பாத்துஓடை ரவுண்டானா முதல் முள்ளக்காடு வரை குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


 உங்களை நம்பிதான் நாங்கள் எங்களை நம்பிதான் நீங்கள் ஓவ்வொரு பகுதிகளிலும் இருக்கின்றவர்கள் முதலமைச்சாின் 34மாத கால ஆட்சியின் சாதனைகளையும் இரண்டு ஆண்டுகால மாநகராட்சி பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் தின்னை பிரச்சாரம் மூலம் இல்லம் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும்.


 கடந்த தேர்தலில் கனிமொழி எம்.பி, பெற்ற வாக்குகளை விட மாநகராட்சி பகுதியில் கூடுதலான வாக்கு பெற்றுகொடுக்கும் அந்த வார்டு நிர்வாகிகளுக்கு பாிசுகள் வழங்கப்படும்.


 தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சி இன்னும் 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருக்கும் நீங்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இருந்தால் அதை மறந்துவிட்டு பணிகளை மட்டும் செய்யுங்கள் நிறைவாக குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.


திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து கொடுக்க தயாராக வுள்ளேன்.  என்னை பயன்படுத்திகொள்ளுங்கள்.

என்று மேயர் ஜெகன்  பெரியசாமி பேசினார்.



கலைஞர், ஸ்டாலின், எனது தந்தை பெரியசாமி ஆகியோர் தான் எனக்கு ரோல் மாடல், மகளிர் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்

 

மகளிர் தினம் என்பது பெண்ணுரிமையை நிலைநாட்டுவதும், பாதுகாப்பதுமாகும். பெண்களின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படவேண்டும், அனைவராலும் மதிக்கப்படவேண்டும் .


 1975ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாளை உலக மகளிர் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. 

'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்ற நிலைமாறி, வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த பெண்கள் இன்றைய காலகட்டத்தில் வானில் பறந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு அடித்தளமாக வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் அபார வெற்றியே இந்த மகளிர் தினம் கொண்டாடுவதற்கான ஆணிவேராகும்.



 ஆயினும், அதற்கான வெற்றிகள் எளிதாக கிடைத்துவிடவில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.


 அக்காலத்தில் பெண் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மேலோங்கி இருந்த ஆணாதிக்கத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை போராடி வென்றெடுத்த புரட்சிகரமான நாள்தான் உலக மகளிர் தினமாகும்.



உலக மகளிர் தினத்தையொட்டி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், வின்மீன் தமிழ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்றது.




 'எங்கள் ஊர் மேயர்' கல்லூரி மாணவிகள்


கேள்வி-பதில்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பதிலளித்தார்.


எனக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எனது தந்தை பெரியசாமி ஆகியோர் தான் எனக்கு ரோல் மாடல். அவர்களது வழியிலேயே இன்று நான் பணியாற்றுகிறேன்.


 இன்று நான் மேயராக இருந்து பணியாற்றுவதை பார்ப்பதற்கு எனது தந்தை பெரியசாமி இல்லையே என்ற மனவருத்தம் உள்ளது.


 பொதுமக்கள் என்மீது நம்பிக்கை வைத்து நேரில் சந்திக்கும் பொழுது பலர் கூறும் கருத்துக்களை நான் குறிப்பாக எடுத்துக் கொள்வேன்.


அதில் மக்களுக்கு முக்கியமான திட்டம் எது என்பதை நல்ல சிந்தனை, தொலைநோக்குத் திட்டத்தோடு ஆய்வு செய்து அதை நடைமுறைப்படுத்துவேன். ஒவ்வொருவரும் முயற்சி மற்றும் பயிற்சியில் ஈடுபட்டால் சாதனை படைக்கலாம். மாநகரில் சுகாதாரத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில் 1000 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


 எதிர்கால மக்கள் நலன் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையோடு, மரக்கன்றுகள் நடப்பட்டு மாசு இல்லாத நிலை உருவாக்கியும், மாநகராட்சிப் பள்ளியில் தரம் உயர்வு, உள்ளிட்ட பணிகளுக்காக நாங்கள் பொறுப்பேற்றப் பின் தேசிய அளவில் 3 விருதுகளை பெற்றுள்ளோம். 80 சதவீதம் நெகிலி கழிவுகளை உபயோகப் படுத்தாத படி விழிப்புணர்வை ஏற்படுத்தி வழிவகை செய்துள்ளோம்.



 உங்களைப் போன்ற மாணவிகளும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுவதற்கு நீங்களும் ஒத்துழைக்க வேண்டும். மாநகரில் புதிதாக 2500 மல்டிகலர் விளக்குகள் அமைக்கப்பட இருக்கின்றன.



அதில் காலசூழ்நிலை பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றாற்போல் மின்விளக்குகள் ஒளிரும்.


மாநகராட்சிப் பணிகளை பொறுத்தவரை மாநகராட்சி பகுதிகளில் தரமான நல்லமுறையில் பணி செய்பவர்களுக்கும், குறைந்தளவில் ஒப்பந்தம் கேட்டவர்களுக்கும் வழங்கப்பட்டு, அதை முறையாக ஆய்வு மேற்கொள்கிறோம்.



 அதில் ஏதாவது தவறு நடந்திருந்தால் நடவடிக்கை மேற்கொள்வோம். அதேபோல் முதலமைச்சராக தளபதியார் பொறுப்பேற்றவுடன் தூத்துக்குடி பகுதியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்டு, எங்களுக்கு கொடுத்த ஆலோசனையின்படி புதிய கால்வாய் மற்றும் தார்சாலைகள் அமைத்துள்ளோம்.


 தற்போது பெய்த மழை வெள்ளம் எதிர்பாராதது. இருப்பினும், அதையும் எதிர்கொண்டு பணிகளை செய்து மக்களை பாதுகாத்துள்ளோம்.


 இனி வரும் மழை காலங்களில் எந்த கனமழையாக இருந்தாலும், சாலையில் தண்ணீர் தேங்காத வகையில் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம்.


 மாநகராட்சி பகுதிகளில் 155 பூங்காக்கள் இருக்கின்றன.


அதில், கட்டமைப்புப் பணிகளை முறைப்படுத்தி செய்துள்ளதால், முதியவர்கள் பலரும் காலை, மாலை நேரங்களில் அதில் தங்களது உடல் வலிமைக்கேற்ப நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.



 நாங்கள் ஆய்வுக்குச் செல்லும் போது அவர்களெல்லாம் எனது தந்தையோடு பழகியவர்களாகத் தான் பல பேர் இருக்கின்றனர்.


நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்த பூங்காவின் மூலம் நாங்கள் புத்துணர்ச்சியோடு இருக்கிறோம் என்று பொதுமக்கள் கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.



ஓய்வின்றி உழைத்தால், எல்லோரும் தான் நிர்ணயித்து கடக்க வேண்டிய லட்சியத்தை அடையலாம்.

 அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்று மாணவிகள் மத்தியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசியர் கருப்பசாமி மற்றும் பாலவிநாயகம், அருணாச்சல ராஜ், ஜெயலெட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர். கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக