செவ்வாய், 23 டிசம்பர், 2025

தவெக-விலும் சாதி அரசியல் குற்றச்சாட்டு விஜய்-ன் தவெககட்சியில் பெண் என்பதால் பதவி மறுப்பா !!!

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டம் 6 தொகுதிகளிலும் எந்த ஒரு சாதியும் பெரும்பான்மை அல்ல; ஒவ்வொரு தொகுதியிலும் 2–3 சாதிகள் தான் வெற்றியை நிர்ணயிக்கின்றன என்ற முக்கிய அரசியல் தகவல் வெளியாகியுள்ளது 

இது பற்றிய செய்தியாவது:-

சென்னை | 23.12.2025

தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) பல ஆண்டுகளாக களப்பணியாற்றியும், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் நிர்வாகி அஜிதா ஆர்க்னஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகத்தை தொடங்குவதற்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை “விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் நடத்தி வந்தார். 


அந்த இயக்கத்தில், திமுகவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள பில்லா ஜெகன் (ஜெகன்) மற்றும் அவரது சகோதரர் சுமன் ஆகியோர் முக்கிய பொறுப்புகளில் இருந்தனர். விஜய் படம் வெளியான போது தோரணம் கட்டுதல், ரசிகர்களை முதல் காட்சிக்கு திரட்டுதல், இயக்கத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் கட்சி தொடங்கியதையடுத்து, அவர்கள் ஏற்கனவே திமுகவில் செயல்பட்டு வந்ததால் ரசிகர் மன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகினர். இதன் பின்னர், பில்லா ஜெகனின் தங்கை அஜிதா ஆர்க்னஸ் தவெக கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார்.


கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் நிகழ்ச்சிகள், மாலையணிவிப்பு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பணிகளில் அஜிதா ஆர்க்னஸ் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


விஜய் கட்சியில்

பெண் என்பதால் பதவி மறுப்பு தெரிவித்தார்களா!!!


 இருப்பினும், அவர் பெண் என்பதாலும், தூத்துக்குடி மாவட்டத்தின் சமூக அரசியல் சமநிலை காரணமாகவும், மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த சாதிக்கும் பெரும்பான்மை இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் எந்த ஒரு சாதிக்கும் பெரும்பான்மை கிடையாது என்பதே அரசியல் யதார்த்தம். 

இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் அங்காங்கே இரண்டு அல்லது மூன்று சாதிகள் மட்டுமே தேர்தல் வெற்றி–தோல்வியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளன என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி,

விளாத்திகுளம் – ரெட்டியார், நாயக்கர்

கோவில்பட்டி – நாயக்கர், தேவர்

ஓட்டப்பிடாரம் – தலித், வேளாளர்(பிள்ளை)

திருவைகுண்டம் – 

தேவர், வேளாளர் ( பிள்ளை), தேவேந்திர குல வேளாளர், நாடார்

திருச்செந்தூர் – பரதர், முஸ்லிம், தலித், நாடார், யாதவ்

தூத்துக்குடி – பரதர் (மீனவர்), வேளாளர் (பிள்ளை), நாடார், தேவேந்திர குல வேளாளர்

என ஒவ்வொரு தொகுதியிலும் சமூக அரசியல் சமநிலை மாறுபட்டு காணப்படுகிறது.

இதன் காரணமாகவே, கடந்த தேர்தல்களில் பாஜக தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக வேலுமணி உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்களது சாதி அடையாளங்களை முன்னிறுத்தியும் தோல்வியை சந்தித்தனர். 

வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கனிமொழி இடம் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. இது, ஒரே சமூக அரசியலை முன்னிறுத்தி வெற்றி பெற முடியாது என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக  அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களையே மாவட்ட செயலாளர்களாக நியமித்து வருவதால் தேர்தல் தோல்வியை சந்தித்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை என்றும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தவெக-விலும்  சாதி அரசியல் குற்றச்சாட்டு

தவெக கட்சியிலும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே தூத்துக்குடி மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நடிகர் விஜய்க்கு யோசனை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் அதிருப்தி ஏற்படுத்தி இருக்கின்றது.


இதன் விளைவாக, நாடார் சமூகத்தைச் சேர்ந்த எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் என்பவருக்கு தவெக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவரும் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள்களில் மாலையணிவிப்பு, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தேர்தலை சந்திப்பதற்கு முன்பே தவெக கட்சிக்குள் கடும் கோஷ்டி பூசல் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அஜிதா ஆர்க்னஸ் தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். 


ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவரை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு பணியாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு தடையால் உணர்ச்சிவசப்பட்ட அஜிதா ஆர்க்னஸ் அலுவலகம் முன்பு கதறி அழுததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.


வீடியோ பார்க்க 

பின்னர், தவெக கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், அஜிதா ஆர்க்னஸுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து,

“தலைமை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. உயிருள்ளவரை தமிழக வெற்றி கழகத்தில் விஜய்க்காக பயணிப்போம்”

எனக் கூறி, அஜிதா ஆர்க்னஸ் தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

🗞️ தூத்துக்குடி லீக்ஸ்

👉 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக