புதன், 24 டிசம்பர், 2025

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு தினம்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி : டிச 24

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்  38-ஆம் ஆண்டு நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு இன்று காலை 11மணியளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகம் முன்பும், தொடர்ந்து தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks


இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கினார். அப்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அவரது அரசியல் சேவைகள் குறித்து நினைவுகூரப்பட்டது.

நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், முன்னாள் மற்றும் தற்போதைய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக