வியாழன், 29 பிப்ரவரி, 2024

மக்களின் பக்கம் நின்று திடமாக வாதாடிய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி #பேரா. பாத்திமா பாபு ஒருங்கிணைப்பாளர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் 2024 லீப் வருட பிப்ரவரி 29 ல் கிடைத்திட்ட மகத்தான தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள், உயர்நிதிமன்ற நீதியரசர்கள், அனைவரையும் இவ்வேளையில் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.

#தூத்துக்குடி லீக்ஸ்

செய்தி புகைப்படங்கள்

ரோஜா அருணன் செய்தியாளர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முடிட...  # உச்சநீதிமன்ற தீர்ப்பு

வெளிவந்த உடன்.....

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் வியாபாரிகள் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அளவுகடந்த மகிழ்ச்சி தூத்துக்குடியில் பல இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்பு லட்டு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.



இதுபற்றி தூத்துக்குடி அக்கா பேராசிரியை பாத்திமா பாபு பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்

அதில் தெரிவித்தாவது:- 
கடந்த 29 ஆண்டு கால மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி.


அதற்காக நாங்கள் சந்தித்த இழப்புகள் அதிகம். 15 உயிர்கள்  என்பதை மறந்தும் கடக்க முடியாது... மன்னிக்கவும் முடியாது..


பட்ட வேதனைகள், பட்ட அவமானங்கள், பேசிய அவதூறுகள், வைத்த பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் வாயடைக்க கிடைத்த மகத்தான தீர்ப்பு.



போராட்டத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும், போராட்டத்தில் காயம் பட்டவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும், போராடிய அனைத்து மக்களுக்கும், குழுக்களுக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த அனைத்து அமைப்புகள், திறம்பட வாதாடிய அனைத்து வழக்கறிஞர்கள், லீப் வருட பிப்ரவரி 29 ல் கிடைத்திட்ட மகத்தான தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள், உயர்நிதிமன்ற நீதியரசர்கள், அனைவரையும்

இவ்வேளையில் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.


மேலும் மக்களின் பக்கம் நின்று திடமாக  வாதாடிய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி.


எண்ணூர் விஷவாயு கசிவு போராட்டம்!!!

மேலும் அன்றைய தமிழக அரசு தூத்துக்குடி மக்களின் போராட்ட குரலுக்கு செவி சாய்க்காது 100 நாட்கள் போராடவிட்டது போல....?

 இன்றைய தமிழக அரசு எண்ணூர்  விஷவாயு கசிவு போராட்டத்தை எதிர்த்து போராடும் மக்களை 100 நாட்கள் போராட வைத்து விடக்கூடாது என்றும் இந்த தருணத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக கேட்டு கொள்கிறோம்.




பேரா. பாத்திமா பாபு

ஒருங்கிணைப்பாளர்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக