வியாழன், 11 ஏப்ரல், 2024

தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு... உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு... உயர்நீதிமன்றம் உத்தரவு




இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. 


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா அய்யனாரூத்து பகுதியைச் சேர்ந்த மொட்டையசாமி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார் 


மனுவில், சமீபத்தில் நானும் எனது உறவினரும் காரில் தூத்துக்குடிக்கு சென்றோம். 


அப்போது எனது உறவினருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.


 இதனால் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவரை காரில் அழைத்து சென்றோம்.


 அங்கு மருத்துவமனை நுழைவாயிலில் பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து இருந்தது.


இதனால் மருத்துவமனைக்குள் அவசரமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை ஊழியர்களை ஸ்டெச்சரை எடுத்து வரச்சொல்லி எனது உறவினரை மருத்துவமனைக்குள் அழைத்து சென்று, உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினோம்.


 என்னை போல ஏராளமானவர்கள் உயிருக்கு போராடியவர்களை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.


ஆனால் மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள ஆக்கிரமிப்புகளால் நோயாளிகள் அவதிப்படும் நிலைதான் உள்ளது. எனவே இதுபோன்ற நிலையை தவிர்க்க, தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவசரமாக வரும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட அரசு அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக