வியாழன், 11 ஏப்ரல், 2024

ஓர் வரலாற்றுப் பார்வைஅ ல ங் கா ர த் த ட் டு ம் த ங் க வே ல் ப ண் ணை வீ டு ம்

அ ல ங் கா ர த் த ட் டு ம்

த ங் க வே ல் 

ப ண் ணை வீ டு ம் 

ஓர் வரலாற்றுப் பார்வை

மாவீரர் காசி பாண்டியன் 


வரலாறு என்பதற்கு வந்தவழி தமிழில் என்று பொருளுண்டு. வந்தவழி அறிந்தவர்களுக்கே செல்லும் வழி பிடிபடும். அந்த வகையில் 

மாவீரர் காசிப் பாண்டியனைத் தவிர்த்துவிட்டு தங்கவேல் பண்ணை வீட்டு வரலாறை எழுதிவிட முடியாது.


 தங்கவேல் பண்ணை வீட்டைத் தவிர்த்துவிட்டு அலங்காரத் தட்டு மாவீர்களின் வரலாற்றை எழுதிவிட முடியாது. 


அலங்காரத் தட்டு மாவீரர்களைத் தவிர்த்துவிட்டு தேவேந்திரகுல வேளாளர்களின் போர்க் குணமிக்க போராட்ட வரலாறை எழுதிவிட முடியாது. 


இவ்வாறு ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து கிடக்கும் மாவீரர் காசிப் பாண்டியன் வாழ்வையும் போராட்டத்தையும் அறிந்து கொள்வதற்கு முதலில் அதன் வரலாற்றுப் பின்னணியையும், சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியையும் அறிந்து கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி 

அலங்கார தட்டு!!!

பாண்டியப் பேரரசிற்கு 

அன்னியச் செலவாணியை ஈட்டித்தந்த துறைமுகப் பட்டிணமாகவும் ; கிரேக்கம் எகிப்து பாரசீகம் சீனம் பேரரசுகளின் மணிமகுடங்களை அலங்கரித்த உலகத்தரம் வாய்ந்த முத்துகளின் தாயகமாகவும் அறியப்படுகிற தூத்துக்குடியிலுள்ள ஓர் கடலோர கிராமம்தான் அலங்காரத்தட்டு.


 அலங்காரத் தட்டு கிராமத்தின் கிழக்குப் பகுதியில் நெய்தல் நிலத்து பழங்குடிகளான பரதவர்களும், மேற்குப் பகுதியில் மருதநிலத்து பழங்குடிகளான தேவேந்திரகுல வேளாளர்களும் பூர்வீகமாக வாழ்ந்து வருகிறார்கள்.


 பரதவர்களுக்கு எப்படி கடல் ( மீன்பிடி ) தொழில் பரம்பரைத் தொழிலாக இருக்கிறதோ, அதேபோல் அலங்காரத்தட்டு தேவேந்திரகுல வேளாளர்களுக்கு கடல் ( மீன்பிடி ) தொழிலும், சங்கு குளித்தலும், உப்பு உற்பத்தியும் பரம்பரைத் தொழிலாக இருந்தது. 


அலங்காரத்தட்டு கிராமத்திற்குள் இதிகாசங்களாக சொல்லப்படுகிற இராமாயாணம், மகாபாரதத்தில் புலமை பெற்று கதை படிப்பவர்களும் இருந்தார்கள். 


 போர்ச் சிலம்பத்தில் அத்தனை அடிமுறைகளை கற்றுத் தேர்ந்து கம்பு கட்டுவதில் கரை கண்டவர்களும் இருந்தார்கள்.


 சொந்தமாக வல்லம், கட்டுமரம் வைத்து மீன்பிடித்தல், சங்கு குளித்தலில் தேர்ச்சி பெற்ற கடலோடிகளும் இருந்தார்கள்.


 தொழிலாளிகளும் இருந்தார்கள். ஆணும் பெண்ணுமாக அத்தனை குடும்பத்தினரும் உழைப்பார்வமிக்க உழைக்கும் பூர்வகுடி மக்களாக இருந்தார்கள் 


இத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்த அலங்காரத்தட்டு தேவேந்திரகுல வேளாள்ர்களை தூத்துக்குடியிலுள்ள அத்தனை சமூகத்தினரும் குடும்பமார் என்றே அழைத்து அடையாளப்படுத்தி வந்தனர். 



குடும்பர்கள் வாழும் ஊர்களில் ஊர்க் குடும்பு முறை வழக்கத்திலிருந்தது. குடும்பு முறை என்பது ஒரு வகையில் அதிகாரமுள்ள நிர்வாகக் கட்டமைப்புதான். இதனை அரசின் மிகச்சிறிய வடிவம் எனலாம். 


குடும்பு முறையை முதன்மைப்படுத்தியே நல்லது கெட்டதென அனைத்து காரியங்களும் நடைபெறுவது வழக்கம்.


 பொதுகாரியங்களுக்கு வரிவசூல் என்பது கட்டாயம். அலங்காரத்தட்டு குடும்பமார்களுக்கு அளற்று வளநாட்டார் என்றொரு கம்பீரமான காரணப் பெயரும் உண்டு. 


அதற்கு ஒரு வசீகரமான வரலாற்றுப் பின்னணியும் சொல்லப்படுவதுண்டு. 


அ ள ற் று வ ள நா ட் டா ர்


பாண்டியகளின் ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடிக்கு வணிகம் தொடர்பாக வந்து போய்க் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் துறைமுகப் பட்டிணமான கொற்கை அருகிலுள்ள பரதவர்கள் செறிந்து வாழும் புண்ணைக் காயல் பகுதிக்கு கிறித்து சமயப் பரப்புனர்கள் வந்து சேர்ந்தார்களாம்.


 வணிகம் செய்ய வந்தவர்களும், மதத்தை பரப்ப வந்தவர்களும் கைகோர்த்து பாண்டியர்களுக்கும் பரதவர்களுக்கும் இடையில் உரசலையும் விரிசலையும் உண்டாக்கினார்களாம். 


ஐரோப்பியர்கள் கால்பதித்த நிலப்பரப்புகளில் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியை நெய்தல் நிலத்து மக்களிடமும் கையாண்டார்களாம்.



 இதனைப் பெருஞ்சிக்கலாகக் கருதிய பாண்டியராசாக்கள் தூத்துக்குடி, கொற்கை இரண்டு துறைமுகங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்தும் வகையில் கடற்கரையோரம் நீண்டதொரு காப்பரணை உருவாக்கத் திட்டம் தீட்டினார்களாம். 


அதனடிப்படையில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வடக்கிலிருந்து, கொற்கை துறைமுகத்திற்கு தெற்கு வரையுள்ள

1.ஐயனார்புரம்,  

2.தளவாய்புரம், 

3.சுடலையாபுரம், 

4.கோமஸ்புரம், 

5.கணேசபுரம், 

6.கீழ அழகாபுரி 

7.மேல அழகாபுரி, 

8.அலங்காரதட்டு, 

9.திரேஸ் புரம் 

10.லூர்தம்மாள்புரம், 

11.கோக்கூர், 

12. சிவந்தாகுளம், 

13.முத்தையாபுரம்,  

14.ஒத்த வீடு, 

15.திரவிய புரம், 

16.பொட்டல்காடு, 

17.புல்லாவெளி 

18.ராமச்சந்திராபுரம் 

19. மஞ்சள் நீர்க் காயல் 

20.சர்வோதயாபுரி 

21.புது நகர் 

22. ஆவாரங்காடு 

23. கீழகீரனூர் 

24. தலைவன் வடலி 

25. சுகந்தலை 

26. ஆறுமுகநேரி 

போன்ற பாண்டிய மரபினரான தேவேந்திரகுல வேளாளர்கள் வாழ்ந்து வருகிற கடற்கரையோர ஊர்களிலுள்ள ஊர்க் குடும்பர்களை சந்தித்துப் பேசி நிலைமையை விளக்கப்படுத்தி துறைமுகங்களுக்குப் பாதுகாப்பளிக்குமாறு உரிமையோடு உத்தரவிட்டார்களாம். 


மேற்படி ஊர்க் குடும்பர்கள் அனைவரும் மகாசபை கூட்டம் போட்டு கலந்துபேசி பாண்டிய ராசாக்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டார்களாம். அதனடிப்படையில் பாண்டியராசாக்கள் மேற்படி ஊர்களின் தொகுப்பிற்கு அளற்று நாடென்றும், அத்தொகுப்பு ஊர்களைச் சேர்ந்த குடும்பர்களை அளற்று நாட்டாரென்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்களாம்.



 அன்றுமுதல் கடற்கரையோரம் மலைப்பாம்பு படுத்திருப்பது போல நீண்டு செல்லும் அளற்று வள நாடு வலிமையான காப்பரணாக திகழ்ந்ததாகவும் ஒரு வசீகரமான வரலாற்றுப் பின்னணி சொல்லப்படுகிறது. 


இதனை உறுதிப்படுத்தும் வகையில் அப்பகுதி கிறித்துவ நிறுவனங்களின் ஆவணக் குறிப்புகளும், பரதவர்களால் 1810 இல் எழுதப்பட்ட பாண்டியர் குல பழமை , ஜெ.எச். செல்வராஜ் மிராந்தா எழுதிய 1900-'50, காலனியம் சமயம், பரவர் சில வரலாற்றுக் குறிப்புகள் போன்ற நூல்களிலும் வெட்டும் பெருமாள் பாண்டியன் காலம் வரை பாண்டியர்களுக்கும் பரவர்களுக்கும் இடையிலான முரன்களும், மோதல்களும் இருந்ததைத் தடம் பிடித்துக் காட்டுகின்றன. 


ஆ று மு க ம் 

த ங் க வே ல்


அலங்காரத்தட்டு தேவேந்திரகுல வேளாளர்களில் பலரும் சொந்தமாக வல்லம், கட்டுமரம், விசைப்படகு வைத்து கடல் (மீன்பிடி) தொழில் செய்து வந்துள்ளனர். பலருக்கு இன்றறவும் சொந்தமாக உப்பளங்கள் இருக்கிறது.


 இத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட அலங்காரத்தட்டு கிராமத்தில் ஆறுமுகம், தங்கவேல், கட்டிராஜா, பெருமாள் என அண்ணன் தம்பி நால்வர் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு அலங்காரத்தட்டு அருகிலுள்ள காளவாசலில் நான்கு ஏக்கர், முத்தையாபுரத்தில் இருபத்தியேழு ஏக்கர் மொத்தம் முப்பத்தியோரு ஏக்கர் உப்பளங்களும், இரண்டு மீன்பிடி வல்லங்களும் சொந்தமாக இருந்தது.


 உப்பு உற்பத்தி செய்தல், மீன்பிடித்தல், சங்கு குளித்தல் போன்ற தொழில்களில் பேரும் - புகழும் பெற்ற பெரிய மனிதர்களாக இருந்தனர். 


மூத்தவர் ஆறுமுகம் மாகாளி என்பவரை மணமுடித்து அவர்களுக்கு பூவம்மாள், செல்வக்கனி, முத்துமாரி என பெண்களும் சவுந்தரராஜன் ஒரு ஆணுமாக நான்கு பிள்ளைகள் இருந்தனர்.


 இரண்டாவது தம்பி தங்கவேல் - செல்லம்ம்மாவை மணமுடித்து அவர்களுக்கு இரத்ணாவதி, காந்திமதி, அம்பிகாவதி, இராசம்மா நான்கு பெண்களும் செல்வராஜ், ஜெயராஜ், தர்மராஜ், காசிப் பாண்டியன், சந்திரகாந்தன் ஐந்து ஆண்களுமாக ஒன்பது பிள்ளைகள் இருந்தனர்.


 இன்னொரு மூன்றாவது தம்பி கட்டிராஜா என்பவர் வள்ளியம்மாளை மணமுடித்து அவர்களுக்கு ஆனந்தன், நித்யாணந்தன் இரண்டு ஆண்களும், ஆணந்த ஜோதி ஒரு பெண்ணுமாக மூன்று பிள்ளைகள் இருந்தனர். நான்காவது தம்பி பெருமாள் ரம்பா என்பவரை மணமுடித்து அவர்களுக்கு சிறீதரன் ஒரு ஆண்பிள்ளை இருந்தது .


இதில் ஆறுமுகம் தங்கவேல் இருவரும் நல்லது கெட்டது, வம்பு வழக்கு தொழில் எதுவானாலும் இணைபிரியாமல் இணைந்தே செயல்பட்டு வந்தனர்.


சாதி, மதம், வர்க்கம் என்ற வரம்புகளைக் கடந்து பலதரப்பு மக்களோடும் பராபட்சமின்றி பழகிவந்த ஆறுமுகம் தங்கவேல் இருவரோடும் சமூகத்தில் சண்டியரென்று பெயரெடுத்த தூத்துக்குடிச் சண்டியர்கள் பலரும் தொடர்பு வைத்திருந்தனர். 1939 க்கு முன்னர் ஆறுமுகம் தங்கவேல் இருவரும் வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்தனர். 1939-1945 காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போர் மூண்டு நடந்து கொண்டிருந்த போது உடல் வலிமையுள்ள தண்டனைக் கைதிகளை படையில் சேர்த்து போரில் ஈடுபடுத்த ஆங்கிலேய அரசாங்கம் முடிவெடுத்தது. அதனடிப்படையில் ஆறுமுகம் தங்கவேல் இருவரும் படையில் சேர்க்கப்பட்டு போரில் பங்கெடுத்து இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததும் விடுதலை பெற்றனர். ஆறுமுகம் தங்கவேல் இருவருக்கும் இப்படியொரு பின்னணி இருந்ததால் தூத்துக்குடிச் சண்டியர்களுக்கு பண்ணை வீட்டின் தொடர்பு தேவைப்பட்டது. 

வாழ்க்கையின் சகல பரிணாமங்களையும் அனுபவத்தால் கண்டுணர்ந்த ஆறுமுகம் தங்கவேல் இருவருக்கும் சண்டியர்களின் சகவாசம் ஒரு போதும் தேவைப்படவில்லை. இருவரும் தங்களுக்கென்று தனிப் பாதை வகுத்து தானுண்டு தன்குடும்பமுண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.


த ங் க வே ல் 

ப ண் ணை வீ டு


தங்கவேல் குடியிருந்த வீடு பண்ணை வீடு என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டது. ஏனைய பகுதி மக்களால் தங்கவேல் பண்ணை வீடு என்று அழைக்கப்பட்டது. பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி தலையெடுக்கும் வரை எந்தவொரு சிக்கலும் பிக்கலும் இல்லாமல் காலத்தின் போக்கில் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிள்ளைகள் தலையெடுத்த பிறகு நினைத்துப் பார்கமுடியாத நெருக்கடிகள் எல்லாம் வந்து சேர்ந்தன. 


*வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்க மனிதர்கள் ஒரு திட்டம் தீட்டிச் செயல்படுகிறார்கள்.

நகர்த்துகிறார்கள். கிறார்கள். மனிதர்களின் போக்கைத் தீர்மானிக்க சமூகம் ஒரு திட்டம் தீட்டிச் செயல்படுகிறது.


 சமூகத்தின் போக்கைத் தீர்மானிக்க அரசாங்கம் ஒரு திட்டம் தீட்டிச் செயல்படுகிறது. அரசாங்கத்தின் போக்கைத் தீர்மானிக்க அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு திட்டம் தீட்டிச் செயல்படுகிறார்கள்.அதிகாரத்தில் இருப்பவர்களின் போக்கைத் தீர்மானிக்க ஆட்சியாளர்கள் ஒரு திட்டம் தீட்டுகிறார்கள்.


 ஆட்சியாளர்களின் போக்கைத் தீர்மானிக்க அரசியல் கட்சிகள் ஒரு திட்டம் தீட்டிச் செயல்படுகிறது.


 அரசியல் கட்சிகளின் போக்கைத் தீர்மானிக்க தலைவர்கள் ஒரு திட்டம் தீட்டிச் செயல்படுகிறார்கள். 


தலைவர்களின் போக்கைத் தீர்மானிக்க தொண்டர்கள் ஒரு திட்டம் தீட்டிச் செயல்படுகிறார்கள். அவ்வகையில் ஆறுமுகம் தங்கவேல் இருவரும் தீர யோசித்து திட்டம் தீட்டிச் செயல்படுத்தி வாழ்ந்த வாழ்க்கையை அவர்களின் பிள்ளைகள் தர்மராஜ் பாண்டியரும், காசிப்பாண்டியரும் தீட்டிய திட்டங்களும் செயல்படுத்திய திட்டங்களும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.


தொடரும்...

நன்றி 

தொகுப்பு:-

இரா.ச .சுபாசினி மள்ளத்தி

தலைவர் 

மள்ளர் போராயம்

தேதி:-11-4-2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக