செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடி – புதிய ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

Tamil Nadu updates photo news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே, புதிய ஆட்டோ ஸ்டாண்ட் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்  திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் பேசிய அமைச்சர்,

 “கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருந்த நலவாரியங்கள், திமுக ஆட்சியில் முழுமையாக செயல்படுகின்றன. ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நலவாரியத்தின் மூலம், குடும்பத்தினருடன் நீங்களும் பல்வேறு நன்மைகளை பெறலாம். 

அனைவரும் இதில் உறுப்பினர்களாக இணைந்து, நலவாரியத்தின் பயன்களை மற்றவர்களுக்கும் எடுத்துரைத்து, திமுக தொழிற்சங்கத்தை வலுப்படுத்த வேண்டும்” என்றார்.



விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வட்டச்செயலாளர் டென்சிங், கவுன்சிலர் ரெக்ஸ்லின், பகுதி அணி அமைப்பாளர் ஜோயல், ஹோட்டல் மேனேஜர் ஜஸ்டின், ஆட்டோ ஓட்டுநர் நலசங்க தலைவர் சசிகுமார், செயலாளர் செல்வம், பொருளாளர் ஜான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், இம்மானுவேல், தாமஸ், ராஜா, சிலுவை அந்தோணி, சுரேஷ், மைக்கேல் காலின்ஸ், பிரத்விகுமார், மனோகரன், சாலமோன் மாணிக்கம், ஜவஹர், பிரைட்டன், ஜெயபால், சந்தனகுமார், கணேசன், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பட் உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக