Tamil Nadu updates
Photo news by Arunan journalist
தூத்துக்குடி, மே 6:
பள்ளி கல்லூரி வாகனங்களில் செல்லும் மாணவ மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் இன்று 6-5-2025 பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கு ஃபிட்னஸ் சோதனை நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மற்றும் மாவட்ட ஆர்.டி.ஓ. சரவணன் ஆகியோர் பங்கேற்று வாகனங்களை நேரில் ஆய்வு செய்தனர்.
வாகனங்களில் முன் மற்றும் பின்புறக் கேமரா, பிரேக் முறை, ஏர் கண்டிஷனர், வாகனத்தின் தயாரிப்பு வருடம் உள்ளிட்ட அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டன.
சோதனையின் பின், பள்ளி வாகனங்களுக்கு ...
இந்த வருட 25- டூ 26 ஃபிட்னஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகன டிரைவர்கள் பங்கேற்று தங்கள் வாகனங்களை ஆய்வுக்காக கொண்டு வந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பயிற்சியில், விபத்து நேரத்தில் முதற்கட்ட உதவிகளை வழங்குவது, 108 அவசர எண்கள் மூலம் உதவி பெறுவது குறித்து மருத்துவர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர். தீயணைப்பு துறை அதிகாரிகள் தீ விபத்து நேரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் demonstratIon வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், பேசுகையில்...
“ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் கட்டாயமாக பெண் உதவியாளர் ஒருவர் வாகனத்தில் இருக்க வேண்டும். இது பின்பற்றப்படாவிட்டால், உரிய பள்ளி-கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்தார்.
இந்நிகழ்ச்சி மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஒட்டுநர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது.
-






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக