தூத்துக்குடி, மே 4:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 42வது வணிகர் தின மாநில மாநாடு நாளை (05.05.2025) சென்னை படப்பையில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட வணிகர் சங்க உறுப்பினர்கள் இன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் அண்ணண் தெர்மல் சொ. ராஜா தலைமையில், ..
அண்ணா நகர் 7வது தெருவில் இருந்து இரவு 7 மணிக்கு வணிகர் குழுவினர் புறப்பட்டனர்.
இந்த குழுவை மாநில துணைத்தலைவர்கள் . பொன். தனகரன், பாஸ்கர் மற்றும் சிவந்தாகுளம் வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரசேகர் ஆகியோர் கொடி அசைத்து வழியனுப்பினார்கள்.
விழாவில் அண்ணா நகர் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயமுருகன், செயலாளர் நவமணி தங்கராஜ், மாப்பிள்ளையூரணி சங்க செயலாளர் ரத்தினகுமார், தெர்மல் நகர் சங்க செயலாளர் . மூர்த்தி, முள்ளக்காடு M. சவேரியார்புரம் சங்க செயலாளர் திரு. முத்துராஜ், ஸ்பிக்நகர் வட்டார முன்னாள் செயலாளர் பவித்ரா முருகேசன், பூபால்ராயபுரம், S.S. பிள்ளை மார்க்கெட், ஜவுளி சங்கங்கள், அண்ணா பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி நகர மத்திய சங்க பொருளாளர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக