05.05.2025
Photo news by அக்ரி பரமசிவன் சமூக ஆர்வலர்
"அமைச்சரின் மகனுக்கான உப்பு நிறுவனம் – 200 ஏக்கர் அரசு நிலம் ஆட்டையா? அதிமுக வெளியிட்ட புகைப்படம் பரபரப்பு ஏற்படுத்துகிறது!"
தூத்துக்குடி:
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவனின் மகன் பெயரில் செயல்படும் Nice Salt உப்பு உற்பத்தி நிறுவனம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
MAGHIL Aqua Product என்ற நிறுவனத்தின் கீழ் செயல்படும் Nice Salt (FSSAI: 1244029000120) தூத்துக்குடி போல்பேட்டை முகவரியில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதுடன், நாடு முழுவதும் ஏற்றுமதியாகி வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு 200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஆட்டைய போட்டதாக எதிர்க்கட்சியான அதிமுக குற்றச்சாட்டு முன்வைத்து, புகைப்படத்துடன் கூடிய வீடியோவையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.
அதில்,
"சத்துணவு முட்டை பேமஸ் அமைச்சர் சால்ட் மேட்டர்ல அசால்டா சிக்கியிருக்காங்களாம்!"
"குஜராத் மாதிரி டெக்னாலஜி யூஸ் பண்ணி உப்பு உற்பத்தி அதிகரிக்கணும்னு சொன்னவர், சொன்னத செய்யுறதுதான் பழக்கமாச்சே!"
"2000 ஏக்கர்ல உப்பளமாம். அதுக்காக 200 ஏக்கருக்கு மேல அரசு நிலம் போனதாம், 3 குடோனும் கட்டிட்டாங்களாம்!"
என கூறப்பட்டுள்ளது.
மேலும், முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதிகளில் இந்த நிலங்கள் இருப்பதாகவும், தூத்துக்குடி சின்னவர் பெயரிலும் நிலங்கள் உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.
இதனைக் கண்டித்து, பலர் வாட்ஸ் அப் குழுக்களில் கேள்விகள் எழுப்பி வரும் நிலையில், சிலர் பதிவுகளை நீக்குமாறு அழைப்புகள் வந்ததாகவும், நேரடியாக ஒரு தரப்பில் இருந்து அழைப்புகள் வந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்த நில விவகாரம் முக்கியமான அரசியல் ஆயுதமாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் கீதாஜீவன் இதுவரை எந்தவிதமான விளக்கமும் அளிக்காமல் மௌனமுறையின் பின்னால் மறைவது,
"மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா?" என தூத்துக்குடி மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக