தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி மகன் சண்முகராஜ் (வயது 45) என்பவர் நேற்று (29.05.2022) மாலை வேலைக்கு சென்று விட்டு வரும் பொழுது சில ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலைக்கு நீதி கேட்டு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பல்வேறு அமைப்புகளும் இன்று (30.05.2022) தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் பஸ் நிலையம் முன்பாக சாலை மறியல் செய்தனர்.
![]() |
| கலெக்டர்-எஸ்.பி பேச்சு வார்த்தை |
சாலை மறியல் நடந்த இடத்திற்கு உடனடியாக வந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் சமூக அமைப்புகளின் தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் சமூக மக்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழர் விடுதலைக் களத்தின் தலைவர் வழக்கறிஞர் ப.ராஜ்குமார், ஆத்தூர் விவசாய சங்க தலைவர் C.P. செல்வம், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு ஆத்தூர் பா. ராஜேந்திரன்,தமிழர் விடுதலைக் கள வடக்கு மாவட்ட செயலாளர் வே. காளிராஜ்,தெற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் பாண்டியன் மற்றும் அப்பகுதியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக