தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி
தூத்துக்குடி ஏப்ரல் 6
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டநாத பெருமான் திருக்கோவிலில் வழிபாடு மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து உற்சாக ஊர்வலமாக புறப்பட்ட வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்தனர்.
அங்கு தேர்தல் அலுவலர் செந்தில்வேல்முருகனிடம் எஸ்.பி. சண்முகநாதன் தனது வேட்பு மனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்தாரஞ்சன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் காசிராஜன், அ.ம.மு.க. சுப்பிரமணியன் உள்ளிட்ட அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வேட்பு மனு தாக்கல் நிகழ்வை முன்னிட்டு, பகுதி முழுவதும் உற்சாகமான அரசியல் சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக