சனி, 27 டிசம்பர், 2025

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2026 புத்தாண்டு விழா – அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் & 2026 புத்தாண்டு விழா – அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி, டிச.28:

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் 2026 புத்தாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (28.12.2025, ஞாயிற்றுக்கிழமை) காலை 12 மணியளவில் விழா நடைபெற்ற

thoothukudileaks



இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். உடன் திமுக தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்,....

“‘மாற்றுத்திறனாளி’ என்ற சொல்லை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகள் நலனில் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருவது திமுக அரசே. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் மீது அன்பும் கவனமும் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ளவர்கள் இதனை பெற்றுக்கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,” என தெரிவித்தார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


கிஃப்ட் பரிசு வழங்கல் 

இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் சார்பில், ஷெர்லி மற்றும் மோசஸ் (அன்ன ராஜன்) முன்னிலையில், விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அமைச்சர் கீதா ஜீவன் கிப்ட் பரிசுகளை வழங்கினார்.

அமைச்சர் கீதா ஜீவன் -க்கு கலைக்குழு வரவேற்பு!!!

நிகழ்ச்சி முன்னதாக சகாயம் தலைமையிலான கலைக்குழு அமைச்சர் கீதா ஜீவனுக்கு மேளதாளத்துடன் கலைக்குழுவினர் சிறப்பான வரவேற்பு செய்திருந்தனர்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியை மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் சார்பில் IS. ஷெர்லி மற்றும் J. மோசஸ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழா முழுவதும் உற்சாகமும், சமூக ஒற்றுமையும் நிறைந்ததாக நடைபெற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக