தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி
photo news by Arunan journalist
தூத்துக்குடி, டிசம்பர் 04, 2025 — சேலம் தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ள சேலம் RR பிரியாணி நிறுவனம், தூத்துக்குடியில் தனது புதிய கிளையை இன்று (வியாழக்கிழமை) காலை 11:30 மணியளவில் திறந்து வைத்தது.
திறப்பு விழாவில் தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் குத்துவிளக்கு ஏற்றி கடையை துவக்கி வைத்தார்.
நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் தமிழ் செல்வன் அவர்கள் விழாவை முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் நிறுவன பங்குதாரர்களான ஜெயபிரகாஷ், பால் விகாஸ், சாம், மனோ ஆகியோர் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.
புதியதாகத் தொடங்கப்பட்ட இந்த கிளையில் சுவைமிகு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில்
- சிக்கன் பிரியாணி — ரூ. 240
- மட்டன் பிரியாணி — ரூ. 330
மேலும் சைனீஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளும் கிடைக்கின்றன.
முகவரி:
106, S/15, பழை ரோடு,
மேற்கு சிதம்பரநகர்,
மஹிந்திரா கார் ஷோரூமுக்கு எதிரில்,
தூத்துக்குடி.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக