▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
12-8-2024
Photo news by John Bosco
தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்தார்..
நேரில் சென்று ஆறுதல்!!!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாட்டுப் படகு மீனவர்களின் குடும்பங்களை தமிழக மீனவர் பேரவையின் தலைவர் அன்பழகனார் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இலங்கை சிறையில் உள்ள நாட்டுப்படகு மீனவர்களையும், படகுகளையும் மீட்க அரசு வலியுறுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
மீனவர்கள் போராட்டம்!!!
அதே சமயம் நாட்டுப்படகுகள் இலங்கை கடற்படையால் பிடிக்கப்படுவதை தடுக்க, மீனவர்களை திரட்டி விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்தார்.
இதில் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் சேனாதிபதி சின்னத்தம்பி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார், மற்றும் தமிழ்நாடு மீனவ பேரவையின் மாவட்ட தலைவர் திரு ரெய்மண்ட், நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் கொம்பீஸ், ஜெரோமியாஸ் ஜான், பேட்டன் உள்ளிட்ட பலர் கூட இருந்தனர்.
இவன்..
தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக