வியாழன், 14 ஆகஸ்ட், 2025

உப்பளங்களை கையகப்படுத்தும் கப்பல் கட்டும் தள திட்டத்திற்கு எதிர்ப்பு – ஆர்ப்பாட்டம், கடையடைப்பு!

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: 2025 ஆகஸ்ட் 14

தூத்துக்குடி அருகே கடலோர பகுதிகளில் பல தசாப்தங்களாக பார்த்திகள் அமைத்து உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், புதிய துறைமுகத்தை ஒட்டி முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழையகாயல் பகுதிகளில் உள்ள உப்பளங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.


"இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிமுக கம்யூனிஸ்ட் தவெக நாம் தமிழர் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து இன்று முத்தையாபுரம் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்."




ஆர்ப்பாட்டத்தில் ..

அதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்,

 ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு, 

தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், 

நாம் தமிழர் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ், 

கம்யூனிஸ்ட் உப்பு தொழிலாளர் சங்கம் பொன்ராஜ், பேச்சிமுத்து, பரமசிவம், பூமயில், 

மதசார்பற்ற ஜனதா தள மாநில துணைத் தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், 

காங்கிரஸ் கட்சி கதிர்வேல், 

வணிக சங்க நிர்வாகிகள் தெர்மல் ராஜா,பொன் தனகரன், விநாயகமூர்த்தி,ஜவகர், 

விவசாயிகள் சங்கம் ஜோதிமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செழியன், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், பாண்டியவதி பரதர் நல சங்கம் பொதுச் செயலாளர் ஸ்னோஸ், உப்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் மந்திரமூர்த்தி, செயலாளர் சேகர், பொருளாளர் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.




உப்பு உற்பத்தியாளர் சங்கங்கள், உப்பளத் தொழிலாளர் சங்கங்கள், மீன்பிடி தொழிலாளர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை ஆர்ப்பாட்டத்தில் இணைந்தன.


ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக முத்தையாபுரம், முள்ளக்காடு, ஸ்பிக் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார கடைகள் இன்று முழுமையாக அடைக்கப்பட்டன.



--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக