தூத்துக்குடி மாவட்டம் – 15.08.2025
நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.50 லட்சம் மோசடி – எதிரி கைது
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.2,44,800/- பணத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கு, அரசு வேலை வழங்கும் அதிகாரி என கூறி மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணம் கேட்டுள்ளார்.
அதை நம்பிய இளைஞர், தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டதையடுத்து, பணத்தை செல்போன் செயலி மூலம் அனுப்பினார்.
பின்னர் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், NCRP போர்டலில் புகார் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில், ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார் விசாரணையில், திருநெல்வேலியைச் சேர்ந்த பிச்சைகண்ணு (44) சம்பந்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் தஞ்சமடைந்திருந்த அவரை போலீசார் நேற்று (14.08.2025) கைது செய்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக