வெள்ளி, 13 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் ஒபிஎஸ் 72 வது பிறந்த நாள் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஏசாதுரை தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 thoothukudileaks 14-1-2023

photo news by Arunan 



இன்று (14-1-2023 ) முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக பொருளாளர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ பி பன்னீர்செல்வம் அவரின் 72 வது பிறந்த நாள் 

அதிமுக ஒபிஎஸ் அணி‌ கட்சியினர் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி  கொண்டாடி வருகின்றனர்.



தூத்துக்குடியில் ஒபிஎஸ் அணி அதிமுக  மாநகர செயலாளர் ஏசாதுரை தலைமையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஒபிஎஸ் வாழ்க..வாழ்க கோஷமிட்டவாறு கட்சியினர் திரளாக வந்தனர்.




 பின்பு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசு வெடித்தனர். பஸ் பயணிகள் ஆட்டோ டிரைவர் மற்றும் பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார்கள்




அதன் பின்பு தூத்துக்குடி சுகம் ஹோட்டல் பகுதி சத்திரம் ஸ்டாப்‌ மற்றும் தூத்துக்குடி சிவன் கோயில் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக